பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் திற்கஞ்சாமல், அல்லாவின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு பீரங்கி வாய்க்கு நேராக ஒடினர். இத்தகைய அராபியர்கள் பேரில் குண்டு போட பிரஞ்சு விரர்கள் மறுத்தனர். பிரஞ்சுப் போர்வீரர்கள் தங்கள் தொப்பி களைக் கழற்றி ஆகாயத்தில் வீசிவிட்டு ஒடிப்போப் அரா பிய விரர்களை ஆனந்தமாய்க் கட்டிக் கழுவினர். இது சத்யாக்ரகத்தின் வெற்றிக்கோர் உதாரணம். #அர ாபியர் கள் சத்யாக்ரக மென்பது இன்னதென்றறிந்து அதுஷ்டிக் தவர்களில்லை. அவர்கள் ஆவேசத்தில் இறக்கத் துணிந்த வர்கள். அவர்களிடம் அன்பு குடிகொண்டிருக்கவில்லை. சத்யாக்கியிடம் பொருமை கிடையாது. கோபத்தினுல் இறக்கத் துணிவதுமில்லை. ஆனல் தன்னிடமுள்ள துன் பத்தைச் சகித்துக் கொள்ளும் சக்தி காரணமாகவே ப்கை வன் என்பவனைப் பணிய மறுக்கிருன். ஆகவே சத்யாக்ர கிக்கு மனே தைர்யம், அன்பு, பொறுமை வேண்டிய தவசியம். இமாம் ஹ-சைனும் அவருடைய சிறு சைன்யமும் கங்களுக்கு அநீதியான உத்திரவு என்று தோன்றியதை எதிர்த்தனர். அவ்விதம் எதிர்க்கும் பொழுது காங்கள் நிச்சயம் இறக்க நேரிடும் என்பது அவர்களுக்குத் தெரி யும். ஆனல் அநீதியான உத்தரவின்படி நடந்தால் தங்கள் ஆண்மையும், மதமும், அழிந்துவிடும் என்று உணர்ந்தனர். ஆகையால் அவர்கள் இறக்கத் துணிந்தனர். இமாம் ஹாசைன் தமக்கு அநீதியான தென்று தோன்றிய உத் திரவொன்றிற்குப் பணிவதைவிடத் தாமும் தம் புத்திர லும் தம் மருமகனும் காகத்தினுல் வருந்துவதையும், பகளும் மருமகனும் தம் கையாலேயே இறப்பதையும் மேலெனக் கருதினர். இஸ்லாம் மதத்தின் வளர்ச்சிக்கு புஜபலமன்றி இஸ்லாம் மத ஸன்யாசிகளாகிய பக்கிரி களின், சத்யத்திற்காகத் தங்களையே வருத்திக் கொள்ளும் தவமே காரண மென்பது-என்-கம்பிக்கை. ம்ே .