பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சத்தியாக்ரகம் அவனுடைய ஆசையுந் தணிந்து விடும், அவனும் ஒரு கிர பராதியான பெண்ணின் கற்பையழிக்க விரும்பாமல் வெட்கமேலிட்டு ஓடிவிடுவான். | அப்படி அவன் இடா விட்டால் அப்பெண் தன் சகோதரனுடைய தைர்யமான கார்யத்தைப் பார்த்து, தற்சமயம் மிருகத்தன்மை படைக்க மனிதனுடைய காம இச்சையைத் தடுத்துத் தன் கற் பைக் காத்துக் கொள்ளத் தன் மனதை உறுதி செய்து கொள்வாள். தவிர அத் துன்மார்க்கன் புஜவலியால் அப் பெண்ணின் கற்பை பழித்து விட்டால், அதல்ை உண்டா கும் அவமானம் அவனுடையதேயாகும், அவளுடைய தாகாது. கற்பைக் காப்பதில் உயிர் துறந்த பெண்ணும் அவளுடைய சகோதரனும் கடைசி நாளில் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாவார்கள். மற்றவர்கள் நான் சொல் வகை முழுவதும் நம்புவார்கள் என்று கான் கிச்சயஞ் சொல்ல முடியாது. உலகிலுள்ள மனிதர் முன்போலவே கடந்து கொண்டிருப்பர் என்பதை நான் அறிவேன். சகல மதங்களும் எல்லாவற்றிலும் உயர்ந்த லட்சியத்தையே வற் புறுத்தியிருந்தாலும், முற்றிலும் அதன்படி கடக்க எல் லோர்க்கும் சாத்தியப் படாதென்பதை புணர்ந்து, அதி விருந்து சற்றேவிலகி நடக்க இடங்கொடுத்திருக்கின்றன.

  • தேகத்திற்கு அகங்காரம் ஆகாரம் ஆவதுபோல், சமயத்திற்கு கருணை அல்லது. அன்பு ஆகாரமாகும். ஆகை யால் உயிருள்ளவரையும் கருணையை விட்டுவிடலாகாது.” என்று கவி துளசிதாசர் கூறுகின்ருர். இது சாஸ்திர சம் பந்தமான உண்மை என்று எனக்குக் கோன்றுகிறது. இரண்டும் இரண்டும் நான்கு என்பதை கம்புவதைப் போலவே இதையும், நான் நம்புகிறேன். அன்பின் சக்தி யும் ஆன்மா அல்லது. உண்மையின் சக்தியும் ஒன்றே. ஒவ்வொன்றிலும் அதன் உண்மையை அறிந்துகொண்:ே இருக்கிருேம். அந்தச் சக்தி யின்றேல் உலகமே அழிந்து விடும். - -