பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அஹறிம்சா தர்மம் யாகும். ஆகையால் தென்னுப்பிரிக்காவில் சத்தியாக்கிரகி கள் சர்க்கார் தங்களுக்குச் செய்ய விரும்பிய தீங்கை எதிர்த்தது மிகச் சரியே. சர்க்காரிடம் அவர்களுக்கு யாகொரு துவேஷமும் கிடையரு.து. துவேஷங் கிடையாது என்பதற்கு சர்க்காருக்கு உதவி வேண்டிய பொழுது அவர்கள் உதவி செய்ததே கக்க சான்ருகும். அவர்கள் எதிர்த்த தெல்லாம், சர்க்கார் சாவு விளைத்தாலும் ஏற்றுக் கொண்டு அவர்களுடைய சட்டங்களை மீறுவதிலேயே அடங்கும். அஹிம்சா தர்மத்திற்கு வேண்டிய தெல்லாம் கேடு செய்தவனுகக் கருதி ஒருவனுக்கு வேண்டுமென்று துன்பஞ் செய்வதற்குப் பதிலாக, வேண்டுமென்று கானே துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலே யாகும். உடன்பாட்டு முறையாக நோக்கும் பொழுது, அஹிம்சை என்பது பரங்க அன்பு என்று பொருள்படும். நான் அஹிம்சா தர்மத்தை அனுஷ்டிப்பவனுல்ை, என் பகைவனே நேசிக்க வேண்டும். திங்கிழைக்கும் என் தந்தை அல்லது மகனிடம் தான் எவ்விதம் நடந்து கொள் வேனே அவ்விதமே என் பகைவனிடமும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வித அஹிம்சா முறையில் உண்மையும், அஞ்சாமையும் அடங்கும். தான் நேசிக்கும் யாரையும் ஒருவன் ஏமாற்ருததுபோல, அஞ்சவாவது அல்லது அச்சு றுத்தவாவது செய்வது மில்லே. கானங்களி லெல்லாம் கலே சிறந்தது உயிர்த் தானமாகும். உயிர் கொடுப்பவனுக்கு பகைவனும் கேடு கினேயான். கெளரவமாக சமாதான மாவதற்கு வழி புண்டாகி விடும். பயத்திற்கு ஆளாயிருப் பவன் எவனும் உயிர்ப் பிச்சை கொடுக்க முடியாது. ஆகையால் முதலில் அச்சத்தை ஒழிக்க வேண்டும். கோழையா யிருந்து கொண்டு அஹிம்சா தர்மத்தை அதுஷ்டிக்க முடியாது. அஹிம்சா தர்மத்தை அதுஷ் டிக்க அளவற்ற மனே தைர்யம் வேண்டியது அவசியம். அது போர் வீரனுடைய குணங்களி லெல்லாம் சிறந்தது.