பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஒத்துழையாமை னுடைய கடமையாகும் என்று நான் சொல்லத் துணிகின் றேன். பிரகலாதாழ்வார் தம் தங்தைசெய்யும் தீமையை விட்டு விலகி இருந்தார், கோபிராட்டியார் இராவணன் தமக்குச் செய்யவந்த நன்மைகளைத் தள்ளிவிட்டார். பர தாழ்வார் தம் காப் கைகேயி செயல்களை இழித்துரைத்து அவள் தமக்குத் தேடிவைத்திருந்த ராஜ்ஜியத்தை வேண்டா மென்று தள்ளிவிட்டார். பைபிளைப்பற்றி நான் அவ் வளவு துணிந்து கூறமுடியாது. ஆனல் அதை நான் வாசிக் துணர்ந்தமட்டில், இந்து சமய சாஸ்திரங்கள் கூறுவ தையே அதுவும் கூறுகின்றது என்பது என் அபிப்பிராயம். இயேசு உதவி வேண்டியோ அல்லது உதவிசெய்யவோ பாபிகளுடன் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்குத் தொண்டுபுரிந்து அவர்களைச் சன்மார்க்க நெறியில் நிறுத் தவே அவர்களோடு அவர் கலந்துகொண்டார். ஆனல் தம் மொழிகளைக் கேட்காத இடங்களைவிட்டு அறவே விலகி யிருந்தார். (பால இந்தியா 19-1-1921) 5 o மகாத்மா காந்தி ஒத்துழையாமையைப் பற்றிப் பல விடங்களில் கூறியுள்ள மொழிகளில் சில பின்வருமாறு: 1. அரசாங்கம் ஜனங்களின் மனதைப் புண்படுத்து மேயானல், ஜனங்கள் அதை நீக்குவதற்கான வழி எது ? பொறுக்கக்கூடிய குறைகளுக்கு மனுச் செய்துகொள்ளு தல் முதலியன மருங்காகும். பொறுக்கக் கூடாதவை களுக்கு மருந்து சாத்வீக எதிர்ப்பு ஒன்றுதான். 2. அரசாங்கத்தை ஜன சமூகத்தின் விருப்பத் நிற் கிணங்கி நடக்கச் செய்யவேண்டுமானல், ஜன சமூகத்தி னிடம் சக்தி யிருந்தால்கான் மனுச் செய்து கொள்ளுத லும் பயன் தருவதாகும். அரசாங்கம் செய்யும் திங்கு பொறுக்க முடியாததென்று மேலதிகாரியிடம் முறையிட்