பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஒத்துழையாமை யைப் பகிரங்கமாக எதிர்த்துக் கண்டிப்பதாகும். இப்படி அபிப்பிராயத்தை அடக்கக் கூடாது என்று அரசாங் கத்தை எதிர்க்கும் அதே சமயத்தில் நாமே அபிப்பிராயங் கூறுவதைத் தடுப்பது என்பது சரியாகுமா ? i. து. 15 ஒத்துழையாமை என்பது கட்டுப்பாடும் தியாகமும் உண்டாக்குவதற்கான ஒருமுறை. அதல்ை நமக்கு விரோத் மாக அபிப்பிராயம் கூறுகிறவர்களிடம் பொறுமையாயும் மரியாதையாயும் நடந்து கொள்ள வேண்டும். முற்றிலும் முரண்பாடான அபிப்பிராயங்களா யிருந்தாலும் பரஸ் பரம் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளக் கற்றுக் கொண்டாலன்றி ஒத்துழையாமையை மேற்கொள்வது என்பது ஒருநாளும் முடியாக காரியம். நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுச் சேகரித்துள்ள அனுபவத்தால் அறிந்து கொண்ட சிறந்த பாடம், கோபத்தை விரயம் செய்யா மல் அடக்கிக் கொள்வதே. உஷ்ணத்தை அடக்கினல் அது வேறுவிதமான சக்தியாக மாறி உதவுவது போல, கோபத்தை அடக்கினல் அதை உலகத்தையே வென்று விடும்படியானதோர் சக்தியாக மாற்றிவிடலாம். 16 நம்முடைய இயக்கமானது அஹிம்சாப் போராட்டம், அதல்ை நமக்குப் பணிவு இன்றியமையாததாகும். நம்மு டைய இயக்கமானது உண்மைப் போராட்டம், அதல்ை நாம் உண்மையாக நடக்கிருேம் என்ற உணர்ச்சி நமக்கு மனவுறுதி தரவேண்டும்.காம் எந்த மனிதரையும் அழிக்கும் நோக்கத்துடன் ஹிந்தி இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் யாரையும் விரோதிகளாகக் கருதுவதில்லை. ஒருவ ரிடங் கட நமக்குத் துவேஷம் கிடையாது. துன்பத்தை ஏற்று அனுபவிப்பதன் மூலம் மனமாற்றம் செய்வதே