பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை 79 நம்முடைய நோக்கம். எத்துனே கல்நெஞ்சுடைய சுய கலம் கிறைக்க ஆங்கிலேயரையும் மனமாறும்படி செய்து விட முடியும் என்றே நம்புகின்றேன். o 17 f அஹிம்சா தர்மமே ஒத்துழையாமை இயக்கத்தின் ஜீவநாடிய்ாகும். அதல்ை மற்ற அம்சங்களில் தவறி விட் டாலும் அஹிம்சையாக மட்டும் கடப்போமால்ை போரை நடத்திக் கொண்டு போக முடியும். ஆனல் அஹிம்சையி னின்றும் பிறழ்ந்து விட்டால் அடியோடு அடிபணிந்து விட வேண்டியதே. ஹிம்சைதான் அரசாங்கத்தின் அஸ்தி வாரம் என்பதை மறந்து விடலாகாது. ஹிம்சையே அதன் கேடயமாயும் இறுதிப் புகலிடமாயும் இருப்பதால், ஜனங் கள் கையாளும் ஹிம்சை முழுவதையும் பயனில்லாமல் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருப்பதால், நாம் ஹிம்சையில் இறங்கினல் அதல்ை அதற்கு யாதொரு கேடும் உண்டாகமாட்டாது. ஆதலால் நாம் ஹிம்சையில் இறங்கில்ை அரசாங்கத்துடன் பரிபூரணமாக ஒத்துழைப் பவர்களே ஆவோம். நாம் மேற்கொள்ளும் சகலவித ஹிம்சையும் நம்முடைய மடமை, அறிவின்மை, கையா லாகாத கோபம் என்பவற்றின் அடையாளமேயாகும். எவ் வளவு கோபம் மூட்டிலுைம் அதை அட்க்கிக் கொள் வதே போர்வீரனுடைய உண்மையான லட்சணமாகும். போர் வித்தையின் அரிச்சுவடியைப் படிப்பவன் கூட எதிரி தன்னைச் சிக்கவைக்கும் பொறிகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவான். அரசாங்கம் நமக்குக் கோபம் மூட்டும் ஒவ் வொரு காரியமும் அத்தகைய அபாயகரமான பொறியே யாகும். அந்தப் பொறியில் கை வைக்க நாம் உறுதியாக மறுத்து விட வேண்டும்.