பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஒத்துழையாமை - 18 ஒத்துழையாமை இயக்கம் நடக்கும் போது ஹிம்சை தோன்றுமானல், போக்கிரிகள் செய்தார்கள் என்று அவர் கள் மீது குற்றத்தைச் சுமத்தி விட்டு நாம் சும்மா இருந்து விட முடியாது. அவர்களுடைய செயல்களுக்கும் நாமே ம. பாறுப்பாளிகள் என்பதை உணர வேண்டும்: அப்படி யில்லையெனில் நாம் சுயராஜ்யம் பெறத் தகுதியற்றவர்கள் என்று கிரூபித்தவர்கள் ஆவோம். நாம் போக்கிரிகளையும் அடக்கக் கூடிய சக்தியைப் பெற வேண்டும். அவர்களும் நாம் நடத்தி வரும் புனிதமான தேசிய இயக்கத்தில் தலை யிட்ாதிருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். சம்முடைய இயக்கம் து.ாய்மை செய்யும் இயக்கமாதலால் துஷ்டர்களும் பதிதர்களும் கூடத் தூய்மை பெற வேண்டியகே யாகும். இதை மறந்து விட வேண்டாம், இதுதான் நாம் செய்வதாகச் சொல்லும் காரியம். இதை நாம் அந்தரங்க சக்தியாகச் செய்யாதிருந்து விட்டால் எந்தச் சாத்தான் தன்மையுள்ள ஸ்தாபனத்தைக் கண்டனம் செய்கின்ருேமோ அதைவிட அதிகச் சாத்தான் தன்மையுடையகோர் ஸ்தாபனத்தை அமைக்கும் குற்றவாளிகள் ஆவோம். 19 ஒத்துழையாமை இயக்கத்தின் பிரதம நோக்கம் அர சாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்வதன்று; நம்மைத் தாய்மை செய்து கொள்வதே. ஆல்ை அதன் முதற்பயன் நம்மு டைய தீய குணங்கள் பலவீனங்கள் காரணமாக வாழ்ந்து வரும் அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாகவே @ఠాతతా. # i. o * 20. முதலாளி தொழிலாளி சச்சரவுகளே அரசியல் விஷ பங்களுக்கு உபயோகித்துக் கொள்வதில்லை என்றே ஒத்து