உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை 8T ழையாமை இயக்கம் தீர்மானித்திருக்கிறது. இரு திறத் தாரையும் சமமாக எண்ணவே முயன்று வருகின்றது. அப்படிச் செய்யாமல் தொழிலாளியை முதலாளிக்கு விரோதமாக வேண்டுமென்று கிளப்பி விட்டால் நாம் முட்டாள்களும் ஆவோம்; அரசாங்கத்தின் வலையில் விழுந்தவர்களும் ஆவோம். அரசாங்கம் உடனே முதலாளி `களைத் தொழிலாளிகளுக்கு விரோதமாகவும், தொழி லாளிகளை முதலாளிகளுக்கு விரோதமாகவும் கிளப்பி விட் டுத் தங்கள் பிடியைப் பலப்படுத்திக் கொள்வார்கள். 21 தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தங்கள் அரசியல் லட்சியங்களே அடையப் பயன்படும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனல் அஹிம்சா பூர்வமாக கடத்தப்படும் ஒத்துழையாமை இயக்கத்தில் அவை சேரா. தொழிலாளி கள் தேசத்தின் கிலேமையை அறிந்து தேசத்தின் நலனுக் ாக உழைக்கத் தயாராக இருந்தாலன்றி அவர்களே அரசி யல் விஷயத்துக்கு உபயோகிப்பது அபாயகரமான காரி யம் என்பதை உணர்ந்து கொள்ள அதி விசேஷமான அறிவு தேவையில்லை. ஆல்ை தொழிலாளிகளிடம் இதைத் திடீரென்று எதிர்பார்த்துவிட முடியாது. அது அவர்க ளுக்குச் சாகாமல் உயிருடன் இருப்பதற்கு வேண்டிய அளவான வசதிகள் கிடைக்கும் பொழுதுதான் முடியும். ஆதலால் தொழிலாளர்கள் அரசியல் விஷயத்தில் செய்யக் க டிய பெரிய உதவி தங்களுடைய நிலைமையை உயர்த்திக் கொள்வதும், அரசியல் விஷயங்களே கன்ருய் அறிந்து கொள்வதும், தங்களுடைய உரிமைகளை வற்புறுத்துவதும் தாங்கள் சிருஷ்டிக்கும் பொருள்களே முதலாளிகள் நியாய மான முறையில் உபயோகிக்கும்படிக் கோருவதுமே யாகும். ஆதலால் தொழிலாளர்கள் பெறவேண்டிய முதல் வளர்ச்சி முதலாளிகளுடன் சம பங்காளிகளாகத் தங்கள் S-IV-6