பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 சாத்வீகச் சட்டமறுப்பு கமே அழிந்து விடும். ஆனல் சாத்வீக எதிர்ப்பை அடக்கு வது மனச் சாட்சியையே அடக்க முயல்வதாகும். சாத்வீக எதிர்ப்பினுல் பலமும் ஒழுக்கமுமே உண்டாகும். சாத்வீக மாப் எதிர்ப்பவன் ஆயுதங்களை ஒருநாளும் உபயோகிக்க மாட்டான். ஆகையால் பொது ஜனங்களின் அபிப்பிராயத் தைக் கேட்டு கடக்கப் பிரியமுள்ள அரசாங்கத்திற்கு அவ ல்ை அபாயம் கிச்சயம் உண்டாகும். ஏனெனில் எவ் விஷ யத்தைக் குறித்து அவன் அரசாங்கத்தை எதிர்க்கிருனே, அது சம்பந்தமாகப் பொது ஜன அபிப்பிராயத்தைத் தன் சாத்வீக எதிர்ப்பால் தனக்கு அநுகூலமாக இருக்கச் செய்து அதன் மூலமாய் அவ்வரசாங்கத்தை அழித்து விடுகிருன். ஆகையால் அரசாங்கம் சட்டத்திற்கு அடங் காத பொழுது அதைச் சாத்வீகமாய் எதிர்க்க வேண்டியது ஒரு புண்யக் கடமையாகின்றது. அப்படிச் செய்யாமல் அக்ககைய அரசாங்கத்தோடு உறவு கொள்பவன் அதன் கெட்ட தன்மையில் கலந்து கொள்பவன் ஆவான். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விதியைப் பற்றிச் சாக் விக எதிர்ப்பைக் கையாளுதல் தப்பிதமாயிருக்கலாம். அல் லது அதைக் கையாளுவதில் தாமதம் செய்யும்படியாவது, அல்லது எச்சரிக்கையுடன் இருக்கும்படியாவது சொல்ல லாம். ஆனுல் சாத்வீகமாய் எதிர்க்கும் உரிமையை ஆட்சே பிக்க ஒருவராலும் முடியாது. சுய மதிப்பை விட்டு விடச் சம்மதிக்க முடியாது. ஆல்ை அவ்வுரிமைபை உபயோகிப்ப தில் மனிதனுல் செய்துக் கொள்ளக் கூடிய சகல பாதுகாப் பும் செய்துக் கொள்ள வேண்டும். பொது ஜனங்கள் பலாத் காரத்தை உபயோகிக்கவோ, அல்லது கட்டுக் கடங்காமல் நடக்கவோ செய்யாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அது உபயோகிக்கப்படும் இடத்தின் விஸ்திரன மும், அதை உபயோகிக்கும் வழிகளும் அவசியத்தின் " அளவே யிருத்தல் வேண்டும். (பால இத் தி யா 5-1-22)