பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

13




நுரையருவிப் பாட்டெழுதி
என்னபயன்? இவனைப்போல்
மடமை கண்டால்

இரைமீது பாய்ந்துவிழும்

இளஞ்சிறுத்தைப் பாட்டெழுத
எவனு மில்லை.

தரைவைரக் கற்களுக்கும்

தழும்புண்டு; கீற்றென்னும்
குற்ற முண்டு.

நரைதிரைகள் என்பதெல்லாம்

நமக்குண்டு; பாவேந்தன்
பாட்டுக் கில்லை.


ஒருமுறை தழுவியதும்
உள்ளத்தில் படர்வதுதான்
உயர்ந்த காதல்

இருமுறை படிக்குமுன்பே

இதயத்தில் ஏறுவதிக்
கவிஞன் பாடல்.

திருமுறை என்பதெல்லாம்

திருநீற்றுத் தமிழ்ப்பாடல்;
இந்நாட் டார்க்கு

நெறிமுறை என்பதெல்லாம்

நிச்சயமாய் இவனெழுதி
நிலைத்த பாடல்.