பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

முருகுசுந்தரம்




வண்ண மலரில் அமர்ந்ததும் வண்டுகள்
பண்ணை நிறுத்தி விடுவது வழக்கம்.
இவரோ,
பதவி மலரில் ஏறி அமர்ந்தும்
பாட்டை நிறுத்தாத திருக்குவளை வண்டு.


செழித்த சிந்தனை சிதறுமிக் கலைஞர்,
பழுத்த இலைகளை உதிர்த்து, மீண்டும்
தளிர்க்கத் தெரிந்த தமிழ்நாட்டு வசந்தம்,
பெய்யெனப் பெய்யும் பெருமழை, தமிழர்க்குச்
செய்யவேண் டுவதைச் செய்யத் துடிப்பவர்.
இவரது தலைமை இல்லையேல்
பருவமழை இழந்த பண்ணையித் தமிழகம்.