பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

முருகுசுந்தரம்




முந்திரித் தோப்புத் தஞ்சைத் தரணி
தந்த மறவர்; செந்தமிழ்க் குரவர்.
தாரூர் மார்புத் தமிழவேள் பிறந்த
ஆரூர் நகருக் கடுத்த ஊர்க் காரர்.


அந்நாள் அண்ணா மலைக்கழ கத்துப்
பண்டித மணிகளின் பட்டியில் வளர்ந்த
ஆட்டு மந்தையின் நடுவே கிளம்பிய
காட்டூர் வரிப்புலி! கடல்மடைப் பேச்சர்!
காஞ்சிக் கவிஞன் கையில் வளர்ந்த
தீஞ்சுவைக் காப்பியம்; பாண்டியன் ஆண்ட
பெரும்புகழ் மதுரையில் ஈரோட் டிராவணன்
கருஞ்சட்டை மாநாடு நடத்திய சமயம்
அங்குவாழ்ந் திருந்த ஆஞ்ச நேயர்கள்
லங்கா தகனம் நடத்தினர்; அந்நாள்
தொண்டர் படைக்குத் தலைமை ஏற்றுக்
கண்டவர் வியக்கக் கடமைகள் புரிந்தவர்.


தாடிப் பெரியார் தலைமையில், புதுவை
மீசைப் பாவேந்தர் பாராட் டுரைக்க
வெற்றிச் செல்வியின் வீணைக் கரங்களைப்
பற்றிக் காதற் பண்கள் இசைத்தவர்.
திலகர் போலவும் கோகலே போலவும்
ஜாமியா மில்லியா கல்லூரி கண்ட
ஜாகீர் உசேன் சாகிபு போலவும்
வங்க நாட்டுக் கபீர் போலவும்