பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேடுகிறேன் காணவில்லை




தேடித் தேடியுனைக் காண முடியவில்லை
தேடாமலும் அண்ணா இருக்க முடியவில்லை
பாடி அழுதாலும் பாட்டுச் சலிப்பதில்லை
பாடாமல் இருந்தாலோ அதுதான் பெரியதொல்லை

(தேடி)


மாமரம் தளிர்த்ததடி
மாம்பூ மலர்ந்ததடி
தேமாங் கனிக்குலைகள்
தின்னக் குலுங்குதடி
மாமரம் தளிர்ப்பதற்கு
மரமேறிக் குரல்கொடுத்த
தேமதுரத் தமிழ்க்குயிலைத்
தேடுகிறேன் காணவில்லை

(தேடி)