பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கவிஞரைப்பற்றிக்
கலைஞர்


காற்றின் பெருக்கல் புயலாகும்
நாற்றின் பெருக்கல் பயிராகும்-இனிய
சாற்றின் பெருக்கல் சுவையாகும்
ஆற்றின் பெருக்கல் புனலாகும்-முருகு
பாட்டின் பெருக்கல் என்னாகும்?


பொன்னாகும்!
பூவாகும்!
புதிய மணமாகும்!


'சேர்வராயன் மலைக்கனியும்
சேலத்து மாங்கனியும்
செழுந்தமிழர் பெற்றுமகிழ்ந்தாலும்-என்
செம்மாதுளைக் கவிக்கிணையோ?”
எனக்கேட்கும் என்நண்பர்
முருகு சுந்தரனார்
பருகிடவே தமிழ்தருவார்.


உருகும் திருவாசகத்திற்கு
நெஞ்சென்பர்;
இவர் வாசகமும் அவ்வாறே!


சென்னை
14-1-75