பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

முருகுசுந்தரம்




பெற்றுவிட்டால் பெண்களுக்குப் பிறிதொன்று வேண்டுமா? கருணையும், நிதியும் கலந்த தலைவனடி!' .
என்று பெருமையுடன் எடுத்துரைத்தேன்; அவ்விடத்தில்
நின்று உரையாட நினைக்காமல் விட்டகன்றேன்.


மிளகாய்ப் பழமூக்கும் மேனிப்பச்சைப் பட்டும்
அழகாய்ப் பெற்றிருக்கும் அஞ்சுகமே! கொஞ்சங்கேள்!
பூபால ரெல்லாம் புதுக்காரில் காத்திருக்கும்
கோபால புரத்துக் குடியிருப்பை நீயறிவாய்.
மாடியின் மீதென்றன் மாப்பிள்ளை வீற்றிருப்பார்.
ஒடிப் பறந்தே உள்வாயிற் படிநுழைந்தால்
வட்டச் செயலாளர் என்ற பெயரோடு
மாமியா ரெல்லாம் வரிசையுடன் வீற்றிருப்பார்.
காவல் துறைக்கார நங்கையரும் நாத்தியரும்
ஆவலுடன் வருபவரை அதட்டுவார்; அஞ்சாதே!
கொல்லிப் பலாப்பழத்தில் கூடியுள்ள ஈக்களைப்போல்
சென்னை நகரைச் சேர்ந்தஅவர் பரிசனங்கள்
முன்னாலும் பின்னுலும் மொய்த்திருப்பார்; அறைக்குள்ளே
சட்டசபைத் தோழரெல்லாம் ஒட்டியுற வாடிடுவார்.
காதலன் பேட்டிசற்றுக் கடினந்தான் இந்நாளில்;
இந்தத் தடைகளுக்கு இளங்கிளியே அஞ்சாதே!
சீட்டுக் கவியொன்றைச் செல்லவிடு; 'சேலத்துப்
பாட்டின் இளவரசி பரிவோ டனுப்பிவைத்தாள்'
என்றக் கவியில் எடுத்தியம்பு; பாட்டென்றால்
சட்டசபைக் கூட்டத்தை ஒத்திவைக்கும் என்தலைவன்
நீட்டும் கரத்தோடு நின்னை வரவேற்பான்.