பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டியம்




ஏனாதி திருக்கிள்ளி காலத்திலிருந்து முல்லை மலருக்கு இலக்கியத்தில் பேசும் வரலாறுண்டு; பாவேந்தர் காலத்திலிருந்து திராவிட இயக்கப் பாவலர்களுக்குப் புகழ்புரிந்த வரலாறுண்டு.


தமிழ் என்று சொன்னாலோ, பாட்டென்று பேசினாலோ 'ஒ...! இவன் கழகத்தைச் சேர்ந்தவன் போலிருக்கிறது!’ என்று இந்நாட்டு மக்கள் நிமிர்ந்து பார்க்குமளவுக்குத் தமிழோடும் பாடலோடும் நாம் தொடர்பு கொண்டிருக்கிறோம்.


சிலம்பு இல்லையென்றால் தமிழிசைக்கு வரலாறில்லை; கழகம் இல்லையென்றால் பாட்டரங்கத்திற்கும் வரலாறில்லை. பாட்டரங்கைத் தமிழகத்தில் தொடங்கி வைத்த பெருமை பாவேந்தரைச்சாரும். பேச்சு மேடையைப் போல் பல்லாயிரக் கணக்கான மக்களைப் பாட்டரங்கில் கூட்டிச் சுவைக்க வைத்த பெருமை மாண்புமிகு கலைஞர் அவர்களைச் சாரும். பாட்டரங்க மேடையில் நிமிர்ந்து நிற்க முடியாத சிலர், தமது