பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சபாபதி முதலியாரும், பேசும் படமும் வுடன் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான்-அப் பொழுது அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே ! வே. ச. ஏம்பா ஆப்டுகினேமே இன்னு அழுதழுது மூஞ்சி வீங்கிப்பொச்சா என்ன ? ச. மு. இவைெருத்தன் !-சும்மாயிருடா எனக்கு சிரிப்பு வருது இப்படியும் உலகத்திலே ஒரு மனுஷன் பொய் பேசுவானுண்ணு. நா. மொதவியார், மொதலியார் கொஞ்சம் பொறுங்க நான் சொல்ரத்தே கேளுங்க அவனுக்கு அண்ணன் ஒருத்தன் நான் நாடக கம்பெனி ஆரம்பிச்சபோது என்னிடம் ஆக்டராயிருந்தான் ; அவன் இவனுக்கு மேலே யுக்தி செய்தான் எனது நல்ல நாடகம் ஒன்று நல்ல வசூ லுடன் ஒரு வாரம் ஆடிக்கொண்டு வந்தபோது ஒரு நாள் திடீரென்று ஒரு டெலிகிராம் ஒன்று எடுத்துக் கொண்டு என்னிடம் வந்து ' என் தாயார் இறந்து போளுர்களாம் தந்தி வந்திருக்குது நான் உடனே இன்னேக்கி மெயிலிலே திருநெல்வேலிக்குப் போகனும் எனக்கு அட்வான்ஸாக பணம் கொடுங்கள், என்று கேட்க -கான் அவனுக்குப் பரிதாபப்பட்டு 100 ரூபாய் கையில் கொடுத்து எல்லா செலவிற்கும் வைத்துக்கொள் என்று சொல்லி தேறுதலும் சொல்லி அனுப்பினேன். அவனில்லாதபடியால் மறு நாள் சாயங்காலம் ஆட் டத்தை கிறுத்திவிட்டேன். எனக்கு வேருென்றும் வேலையில்லாதபடியால் மறுதினம் கிண்டி ரேசுக்கு போனேன். பந்தய ரவுண்டில் நுழைந்தவுடனே என் கண்களில் முதலில் பட்ட ஆசாமி நம்முடை ஆக்டர். என்னே பார்த்தவுடன் ஒரே " டும்கியா' வெளியே ஒடிப் போய்விட்டான் பிறகு நான் விசாரித்ததில் அன்றைய ராத்திரியே புறப்பட்டு திருநெல்வேலிக்கு போய் வேருெரு கம்பெனியில் சேர்ந்து ஆட ஆரம்பித்தான் என்று கேள்விபட்டேன். வே. ச. ஏம்பா, அந்த ஆக்டருடைய தாயார் செத்துப்பூட்டது வாஸ்தவம்தானு,