பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 சபாபதி முபிலியாரும், பேசும் படமும் ஜெ. அதெப்படி முடியும் பணம் செலவு பண்ணுதே படம் எப்படி தயார் பண்றது ? ச.மு. அது ஒரு ரகசியம் அப்பறம் சொல்றேன். உங்களுக்குஒருபடம் தயார் பண்ணனும்ணு முதல்லே என்ன செய் யனும் சொல்லுங்க, ஜெ. முதல்லே நல்ல கதையா ஒனும் நல்ல ஆக்டர்ஸுகளாக ஒனும்.ண்ணு ஏதாவது நல்ல பேப்பர்லே அட்வர்டைஸ் பண்ணனும், ச.மு. ரைட் யூ ஆர் (Right you are) அதுக்கு சரியான மனு ஷர் ங்ேகதான் நல்ல ஒரு பத்திரிகையா பாத்து அதிலே இந்த மாதிரி அட்வர்டைஸ் பண்ணுங்க அவசியம் வேண்டியது-ஒரு புது பேசும்படம் தயாரிக்க புதிய கதைகளும் புதிய ஆக்டர்களும் புதிய நடிகைகளும் உடனே வேண்டும். கதை இதுவரையில் யாராலும் எழுதப்படாதபடி புதிதாய் இருக்கவேண்டும் நடிகர் களும் நடிகைகளும் இதுவரையில் சினிமாவில் நடிக் காதவர்களாய் இருக்கவேண்டும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புபவர்கள் உடனே அடியிற்கண்ட விலாசத்திற்கு பதில் ஒரு வாரத்திற்குள் எழுதவேண்டும் கையொப்பம் ச இரண்டு புள்ளி தி, அடே சபாபதி நம்பபுதுசா போனமாசம் வாங்கனமே பங்களா எழும்பூர்லே அது கம்பர் என்னடா. ச. அப்பா. ச.மு. அப்போ என்மேல் விலாஸம் 4 கங்காதர கோவில் தெருண்ணு எழுதிடுங்க அதுக்கென்ன சார்ஜாகுங்க. ஜெ. குறைஞ்ச பட்சம் இருபத்தைஞ்சு ரூபாயாவது ஆகும். ச.மு. சந்தோஷம் சரியான தொகை இங்தாங்க இருவத்தஞ்சு ரூபாய். ஜெ. வேணுங்க தண்டசெலவு எண்ணுத்துக்குங்க அப்றம் அல்லாத்தையும் இழுத்தும்பூடும்.