பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும், பேசும் படமும் #3 வே. ச. இந்த பொம்மனுட்டிங்களுக்கே காதுலே யிருக்கிற கம்மல் அடிக்கடி நினைச்சிக்கின கழுத்துலே வந்துடுத் தப்பா. ச. மு. ஏதோ ஆகிரி ராகத்திலே ஆலாபனை பண்ணு. கோ. அந்த ராகம் தெரியாதுக்கு. ச. மு. அப்போ முகார் எடுத்துகினு பாடு. கோ. (முகாரி ராகத்தில் ஆலாபனை செய்கிருள்) வே. ச. அம்மம்மா ஐயா உங்களை பாடச் சொல்ராங்க அழச் சொல்லலே, ச. மு. டேய் சபாபதி பேசாதிரு. அந்த ராகம் அப்படித்தான் இருக்கும், - வே. ச. மூக்கால அழருப்போலேயா, ச. மு. அதுக்குத்தான் முகாரிண்ணு பேர் வைச்சாங்க. வே. ச. சரிதாம்பா அம்ம என்னே பாத்து யேம்மா பாடறே ஐயாவைப் பாத்து பாடம்மா. ச. மு. டேய் பேசாமலிரு போதும்மா பாட்டு கண்ணுதான் இருக்குது நீ இப்போ உத்திரவு பெத்துக்கோ எங்கிட்ட யிருந்து காயிதம் வந்தாஉடனே வந்துபார் போய்வா. கோ, நமஸ்காரங்க கட்டாயமா எழுதும்படியா வேண்டிக்கி றேன். ச. மு. சரிதான் போய்வா. கோ. நமஸ்காரம் (போகிருள்.) வே. ச. ஏம்பா நீ கவனிச்சியா அந்த அம்மாளுக்கு ஒன்றைக் கண்ணப்பா-என்ன என்னையே பாத்து பாடராங்க ளேண்ணு கவனிச்சேன் முகம் ஒம்பக்கமிருக்குது, கண்ணு என்னே பாக்குது-அதுவுமில்லாத மூஞ்சி என் னப்பா ஒரே கருப்பா யிருக்கிறது. ச. மு. அதான் கோகில கோமளம்னு பேர் வைச்சிருக்காங்க. வே. ச. கோகிலம்ன என்னப்பா.