பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சபாபதி முதலியாரும், பேசும் படமும கும் அது நல்ல யுக்தி தாண்ணு தோணுது-உங்க அபிப் பிராயம் என்ன ? ஜெ. முதலியாரவாள் நீங்க வேறே என்னமான செய்யுங்க இந்த சினிமா கிட்ட மாத்ரம் போகாதீங்க! ச. மு. அது ஏன் அப்படி சொல்ரைங்க, நீங்க அந்த சினிமா விலெல்லாம் கன்னு பழக்கப்பட்டிருக்கீங்களே, ஜெ. கண்ணு பழக்கப்பட்டேன் போங்க எல்லாரும் ஆரம் பிக்கிராங்களேண்னு நானும் ஆரம்பிச்சேங்க கையி லிருந்த பணமெல்லாம் சுன்வைாயிபோயிடுச்சு. ச. மு. அது ஏன் அப்படி ஜெ. காலம் மின்னேபோல இல்லீங்க இந்த தொழிலிலேயே கதை யெழுதரவங்க, பாட்டு கட்டரவங்க, ஆண் பெண் நடிகருங்க எல்லாரும்-முன்பணம், முன்பணம்.ண்ணு வாங்கிப்பூடராங்க அப்புறம் கடைசிலே காமம் போட ராங்க. வே. ச. அதான் நீங்க நாமம் போட்டுகினு வந்திருக்கீங்களோ இண்ணேக்கி ! s. மு. டேய் அதனபிரசங்கி வாயை மூடு-இண் ணக்கி புரட் டாசி சனிக்கிழமை அத்தொட்டு பெரிய நாமமா போட்டு கினு வந்திருக்காரு-அவன் சொல்ரத்தை கவனிக்கா தீங்க நீங்க. - ஜெ. இல்லீங்க நம்ப சபாபதி என்ன சொன்னலும் எனக்கு கோவம் வராது. ச. மு. ஜெகங்காத முதலியார் உங்க கஷ்டங்களை யெல்லாம் ஒண்ணுெண்ணு சொல்லிகினு வாங்க அதை யெல்லாம் தடுக்கரதுக்கு நான் ஏதாவது யோசனை பண்ணிப் பார்க் கிறேன். ஜெ. முதல் கஷ்டம்-ஜனங்களெல்லாம் பார்த்து சந்தோ விக்கும்படியான 5ல்ல ஒரு கதையைத் தேடனும், ச. மு. இது ஒண்னும் கஷ்டம் இல்லேயே அப்படிப் பட்ட கதைகள் எத்தனையோ கான் சொல்லுவனே.