பக்கம்:சமணமும் தமிழும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும்


சு. சமணசமயம் தோன்றிய வரலாறு

சமண சமயத்திற்கு ஜைன மதம், அருகத மதம், திகண்ட மதம், அநேகாத்தவாத மதம், வயாதலாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன.

சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழக்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர் (வென்றவர்) ஆகலின் தீர்த்தங்காருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆரு கதர்' என்றும் இந்த மதத்திற்கு அருகதமதம் என்றும் பெயர் கூறப்படுகிறது.

சமணக் கடவுள் பற்றற்றவர்.ஆதலின் தீர்க்கந்தர் அல்லது சிகண்டர் எனப்பட்டார். அதுபற்றிச் சமண சமயம் திகண்டமதம் எனப் பெயர் பெற்றது. மதங்கள் ஏகாந்தவாதம், அநேகாத்தவாதம் என இருவகை. சமணம்

1. அருனென நிறுத்தி இவனைத் தெய்வமாகடையான் யாவனெனச் கருதிய விடத்து அகரத்தை ஆகாரமாக்கி, 'ஒற்று மிகும்' என்பதநாற் ககர வொற்றின் பின்னே தகரவொற்றை மிகுத்தி, 'சுட்டு மிகும்' என்பதனால் அகரச் சுட்டை மிகுத்தி, முன்னொற்று உண்டேற் செம்மை யுரேறுஞ் சிறந்து' என்பதினால் ஒற்றிலே உயிரை ஏற்றி ஆருகதன் என முடிச்சு” என்பது நேமிநாதம் : எழுத்ததிகாரம்: 10-ஆம் செய்யுளுரை.)