பக்கம்:சமணமும் தமிழும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் 95 சைவரின் பெரியபுராணத்தில் (திருத்தொண்டர் புராணத்தில்) 63 அடியார்களின் சரித்திரம் கூறப்பட வில்லை. எழுபத்திருவர் சரித்திரங்கள் கூறப்படுகின் றன. ஆனால், தொகையடியாரைக் கழித்து 63 அடியார்கள் என்று கூறுகிறார்கள், எழுபத்திரண்டை . ஏன் 63 ஆகக் குறைக்கவேண்டும் ? சமணரது 63 அடியாருக்குச் சமான மாகக் கணக்கிடுவதற்குத்தானே? சென்னை மயிலாப்பூர் போன்ற சில சிவன் கோயில்களில் இப்போதும் அறுபத்து மூவர் உற்சவம் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடை பெற்று வருகிறது. அன்றியும் கன்னட மொழியிலே சைவ அடியார்களின் சரிதம், தமிழ்த் திருத்தொண்டர் புராணம் போலவே எழுதப்பட்டிருக்கின்றன. அவற் நிற்கும் அறுபத்து மூன்று பெரியார் சரிதம் என்று பெயர் சூட்டியுள்ளனர், அதாவது, அருவத்து மூவர ராதான சரிதெ என்றும், அருவத்து முரு புராதன சரனர சரிதே என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இதனால், சமணரைப் போலவே சைவரும் தம் அடியார் தொகையை அ.று பத்து மூவர் என்று ஆக்கிக்கொண்டது தெரிகிறது. சமணர் தம் திரிஷ்ைடி லைகா புருஷர் சரித் திரத்தை ஸ்ரீ புராணம் என்றும் வழங்குவர். ஸ்ரீபுராணம் என்னும் பெயரையுடைய மணிப் பிரவான கடை நூல் ஒன்றும் சமணருக்கு உண்டு. இந்த ஸ்ரீபுராணத்தில் சமணருடைய 63 பெரியாருடைய சரிதங்கள் கூறப் படுகின்றன. சமணர் தம் திரிளஷ்டி பலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீபுராணம் என்று வழங்கி வருவது போலவே, சைவர்களும் தமது பெரியபுராணமாகிய திருத் தொண்டர் புராணத்தை ஸ்ரீபுராணம் என்று பண்டைக் காலத்தில் வழங்கிவந்தனர். ஆனால், இந்த வழக்கு இக் காலத்தில் வழங்கப்பாவதில்லை, தொண்டை நாட்டில், திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது "திருப்பங்குனி புத்திரத்து அறுக் திருகானான 1. P. 5. 6. Mys. Areb, Annual Rept. 1925,