பக்கம்:சமணமும் தமிழும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் 97 சித்தர் வணக்கம் பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குச் கற்பிக்கத் தொடங்கும் போது முதலில் சித்தர் வணக்கம் க. அவது மாபு, 4 ஹரி கமோத்து சிந்தம்' என்று கூறிய பின் ஆசிரியர் பிள்ளை களுக்கு எழுத்துக் கற்பிப்பர், இக் காலத்துப் பாடசாலைகளில் இந்த வழக்கம் கைவிடப் பட்டது. ஆனால், பண்டைக் காலத்தில் இந்த வழக்கம் இருந்து வந்தது. இதில் சிந்தம் என்பது சித்தம் என்பதன் திரிபு. சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சபாமேஷ்டி களில் ஒருவர். எனவே, சமணர் சித்தர் வணக்கம் செய்து வந்தனர். இந்த வழக்கத்தைத்தான் மற்றவர்களும் கைக் கொண்டனர். தமிழ் காட்டிலே சித்தர் வணக்கம் செய்த பிறகு சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கத் தொடங்கியது போலவே, சித்தம் சம " என்று கன்னட நாட்டினரும், ஓம் தமஸ்வதிவாய சித்தம் நம" என்று தெலுங்கு சாட் டினரும் இவ்வாறே சித்த வணக்கம் செய்து பின்கா களுக்கு எழுத்துக் கற்பித்து வருகின் றனர்,' இவ்விடத்தில், பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் வழங்குவது நினைவுகூரத்தக்கது, பள்ளி என்பதற்குச் சமண முனிவர், வாழும் பள்ளி என்பது பொருள். சமண முனிவர், காட்டுச் சிறுவர்களைத் தம் பள்ளிகளில் உள்ள கூடத்தில் இருக்கச் செய்து அவர் களுக்கு எழுத்துக்களையும் நூல்களையும் படிப்பித்து வச் தனர். இதனால் பாடசாலைக்கும் பள்ளிக்கூடம் என்னும் பெயர் ஏற்பட்டது. சமணர் தம் பள்ளிக்கூடங்களில், சிறு வர் களுக்கு எழுத்துக் கற்பிக்கும் போது சித்தர் வணக்கம் கூறிய பிறகு கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த வழக்கத்தான், இக்காலத்திலும் மற்றவர்களாலும் வழக்கத்தில் கைக்கொள்ளப்பட்டது. எனவே, புள்ளிக் கூடம் என்னும் பெயரும், சித்த வணக்க முறையும் சமண சிடமிருந்து பெற்றுக் கொண்டவை என்பது வெளிப் படை. 1, ஸ்ரீபுராணம் சன்முகம் பக்கம் XXXI.