பக்கம்:சமணமும் தமிழும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 109) புவைதி என்னும் கிராமத்தில் முன்பு சமணக்கோயில் இருந்ததென்றும் அக்கோயில்களைக் கொண்டுவந்து திரு வோத்தூர்ச் சிவன் கோவில் கட்டப்பட்டதென்றும் கூறு கின் றனர், புகுவதி கிராமத்தின் வெட்டவெளியில் இரண்டு சமண உருவங்கள் காணப்படுகின்றன. இதற் கருகில் உள்ள குட்டையில் சமணக்கோயிலின் செப்புக் கதவுகள் முதலியன புதைந்து கிடக்கின்றன என்று க. றப் படுகிறது.' திருப்பனம்பூர் : காஞ்சிபுரத்துக்குப் பத்து மைலில் உள்ளது, காஞ்சிபுரத்தில் இமசிதளமகாராசன் அவையில் பௌத்தர்களுடன் சமயவா தம் செய்து வெற்றி பெற்ற அகளங்க ஆசாரியார் என்னும் சமண சமயகுரு இக்கிரா மத்தில் தங்கியிருந்தார். இங்குள்ள சமணக் கோயிலுக்கு முனிகிரி ஆலயம் என்றும் பெயர். இது இம் முனிவரை ஞாபகப்படுத்தும் பொருட்டு ஏற்பட்டபெயர் என்று தோன்றுகிறது. இவ்வாலயத்தின் மதிற்சுவரில் இவ் வாசிரியரின் நினைவுக்குறியாக இவருடைய பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவுக்குறியாக இவர் திருவடிகளைக்கொண்ட ஒரு மண்டபமும் இங்கு உண்டு, இத்திருவடிகளுக்கு மாசிமாதத்தில் பூசை நடந்துவரு இறது. இக்கிராமத்தில் பழைமையும் புதுமையுமான இரண்டு சமணக்கோயில்கள் உண்டு. இக்குச் சமணர் இப்போதும் உன்னனர். இதற்குக் கரத்தை என்றும் பெயர் வழங்கப் படுகிறது, இக்கரத்தைக் கோயிலில் இடித்து சிதைந்து போன பழைய கோயில் ஒன்றிருக்கிறது. இக்கோயில் கட்டிடம் சமவசரணம் போன்று அமைத்துள்ளது, இக் கோயிலில் சாசனங்களும் காணப்படுகிறன. கோபுர வாயிலில் இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. "சாவுவயல் சூழ்தடமும் கனத்தமணி கோபுரமும் பாவையர்கள் ஆடங்களும் பாமமுனி வாசமுடன் மேவுபுழ்த் திருப் பதம்பை விண்ணவர்கள் போற்றிசெய்யத் தேவரிறை வன்சமல சேவடியைத் தொழுவோமே.” -1. North Arcot Lt. Mamaal P. 308,