பக்கம்:சமணமும் தமிழும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சமணமும் தமிழும் திருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. தென்புறத் தில் இயற்கையாக அமைந்த ஒரு குகையும் அதில் நீர் உள்ள சிறு சுனையும் காணப்படுகின்றன. இக்குகையினுன் கற்பாறையில் ஒரு பெண் உருவம் இடது கையில் சாமரை பிடித்து பீடத்தில் அமர்த்திருப்பது போன்றும் இதன் வலது பக்கத்தில் ஒரு ஆண் உருவம் இன்றிருப்பது போன்றும் செதுக்கப்பட்டுள்ளன. பெண் உருவம் . அமர்ந்திருக்கும் பீடத்தின் முன் புறத்தில் குதிரைமேல் ஒரு ஆள் இருப்பது போன்றும், ஒரு ஆண் உருவமும் ஒரு பெண் உருவமும் நின்றிருப்பது போன்றும் காணப் படுகின்றன. இக் குகையின் வாயிற் புறத்தின் மேல் உள்ள பாறையில் கீழ்க்கண்ட கல் எழுத்துப் பொறிக்கப் பட்டுள்ளது : சந்திப் போத்தரசற்கு ஐம்பதாவது: ஈகார்தி குரவர் இருக்க பொன்னியச்சியார் படிமம் கொத்துவித் தான் புகழாக மங்கலத்து மருத்துவன் மகன் காரணன்" எனவே, கர்திபோத்தாசன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் காசாந்தி என்னும் குருவுக்காக பாணன் என்பவன் பொன் இயக்கி' என்னும் பெய ரூன்ன உருவத்தை அமைத்தான் என்பது இந்தக் கல் எழுத்தின் கருத்து. இக் குகையில் காணப்படும் சாமரை பிடித்த பெண் உருவம் இதில் குறிப்பிட்ட பொன் இயக்கி' வின் உருவம் என்ரம் அதன் பக்கத்தில் நிற்கும் ஆண் உருவம் சாகாந்தி என்பவரின் உருவம் என்றும் கருதப் படுகின்றத. இந்த மகயில் பொறிக்கப்பட்ட இன்னொரு கல் எழுத் தம் உண்டு. அது, கி.பி. 984-இல் அரசாட்சிக்கு வந்த இராசராச சோழனுக்குச் கீழ்ப்பட்ட லாடராசன் வீர சோழன் என்பவனால் பொறிக்கப்பட்டது. அதில், இந்த மலை, படவூர்க் கோட்டத்துப் பெருந் திமிரி நாட்டுத் திருப்பான் மலை' என்று கூறப்பட்டுள்ளது. இந்த லாட ராசன் வீரசோழன் தன் மனைவியுடன் இந்த மலையில் வரும் இக் கீழ்ப்பட்ட சொட்டும் எழுச்