பக்கம்:சமணமும் தமிழும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகன் 115) திருவதிகை : தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூரில் இருந்து பண்ருட்டிக்குப் போகும் சாலையில் 14 மைலில் உன்ள ஊர், திருவதி' என்றும் திருவீதி' என்றும் வழக்குவர். திருவதிகை வீரட்டானம் என்னும் சைலக் கோயில் இங்கு உன்னது, சமணராக இருந்த தரும சேனர், சைவராக மாறி இவ்வூரில் சூலை நோய் தீரப்பெற் நத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் பெற்மூர். பாடலி புரத்தில் திருப்பாதிரிப்புலியூர்) இருந்த சமணப் பன் ளியை இடித்து அக்கற்களைக் கொண்டுவந்து குணபரன்' என்னும் அரசன் (மகேந்திரவர்மன்) இவ்வூரில் 'குணதா வீச்சுரம்' என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இதனால், இவ்வூரில் சமணரும் சமண மடமும் சமணக் கோயிலும் பண்டைக்காலத்தில் இருந்த செய்தி தெரிகிறது, இவ்வூர் வயல்களில் இரண்டு சமணத் திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்று 41 அடி உயரமுடையதாய் அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் உள்ளது, இது இவ்வூர் சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மற் சென்று, குமரப்பநாயகன் பேட்டையில் உள்ள சத்தியத் தில் வைக்கப்பட்டுள்ளது இ.சி 31 அடி உயரம் உள்ளது' ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய 13+13-வதி -ஆண் டில், கால்முக நாயனார் முனையதீச்சுரம் உடைய நாயனர் கோயில் சிலம், அர்ஹதேவர் (அருகத்தேவர் = சமணக் கடவுன்) கோயில் நிலம் இரண்டிற்கும் பான்யிைல் சச்சரவு ஏற்பட்ட செய்தி இங்குக் கிடைத்த சாசனத்தினால் தெரிய வருகிறது. இதனால், இங்குச் சமணக் கோயில்களும் அக் கோவில்களுக்குரிய நிலங்களும் இருந்த செய்தி அறியப் படுறெது, இங்குக் கண்டெடுக்கப்பட்ட (மேலே சு. தப் பட்ட) இரண்டு சமணத் திருவுருவங்களும் இதன் உண் மையை உறுதிப்படுத்துகின்றன. சாசனத்தில் கூறப்படு 1. South Arcot District Gazetteer P. 318, Ep. Rap. 192324. Ep. Rep. 1921-22 P. 99. 2. 416 of 1921. Ep. Rop. 1921-22, P. 105