பக்கம்:சமணமும் தமிழும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 127 உரையில் கூறப்பட்டுள்ளது. சோழ அரசன் மேல் சினங் கொண்ட சிவபெருமான, மண் மழை பொழியச் செய்து உறையூரை அழித்தார் என்று பிற்காலத்தில் எழுதப்பட்ட செவ்வந்திப் புராணம் என்னும் மற்ருெரு சைவ நூல் கூறு கிறது.' இதளை அழித்தது சமணர் ஆயினும் ஆகுக; சைவர் ஆயினம் ஆகுக; இவ்வூர் பிற்காலத்தில் மண்மாரி பால் அழிக்கப்பட்டதென்பது தெரிகிறதி, இவ்வூர் அழிந்த பிறகு, திருச்சிராப்பள்ளி சோழரின் தலைநகரா விற்று என்பர். வெள்ளலூர் : திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் வயலில் கல்லினால் அமைக்கப்பட்ட சமணத் திரு வருவச் சிலைகள் காணப்படுகின்ற ன. (Arch. Rep. 19091910), பழகாகப்பள்ளி : சரூர் தாலுக்கா நாகம்பள்ளி திரா மத்தில் உள்ள மகாபலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள சாசனம் திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழ தேவர் காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில், பழ நாகப்பள்ளிக் கோயிலுக்கு திரு வினக்குத் தானம் செய்யப் பட்ட செய்தி கூறப்படுகிறது. இதில் குறிக்கப்பட்ட பழகா கப்பள்ளி என்பது சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை. இதனால் இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது. அமுதமொழிப் பெரும்பள்ளி: திருச்சி தாலுக்கா அன்பில் என்னும் பாரில் உள்ள சாசனம், திரிபுவன சக் காவர்த்தி இராசராசசோழ தேவாது 19-வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், “ திருவிடைக்குடி அமுத மொழிப் பெரும்பள்ளி' என்னும் சமணச் கோவில் குறிப்பிடப்பட் டுள்ள து. | 1. கோயிலைப் பாடியது. தாழிசை 70. உரை. 2. உறைர் அழித்த சருக்கம். 3. 218 pl 1330-31. 4. S. I. I. (Texts). Vol, VII, No. 138. P. 98.