பக்கம்:சமணமும் தமிழும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130) சமணமும் தமிழும் உள்ளன. ஏரிக்கரையிலிருக்கிற திருவுருவத்திற்கு இந் நகர மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை பூசை செய்கிறார்கள்.' வண்ணம் : உண்ணம் என்றும் கூறுவர். உடையார் பாணையத்துக்குத் தென் மேற்கில் 19 மைலில் உள்ளது. கீழ்ப் பளூருக்குத் தெற்கில் 2 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது." லால்குடி : திருச்சி தாலுகா திருச்சிராப்பள்ளிக்கு வடகிழக்கே 11 மைன், இவ் வூருக்கருகில், புன்னம்பாடிக் குப் போகிற சாலையில் இடது பக்கத்தில் ஒரு வயலிலே ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.' மகாதான புரம் : குளித்தலை தாலுகா குளித்தலைக்கு மேற்கே 18 மைலில் உன்னது. இது கங்கைகொண்ட சோழபுரத்தின் (இதற்குப் பழைய செங்கடம் என்றும் பெயர்.) ஒரு பகுதியாக உள்ளது. இவ்விடத்தில் பல சமண உருவங்கள் காணப்படுகின்றன. சிவாயம் : குனித்தலை தாலுகா குளித்தலைக்குத் தெற்கே 5மைல், இங்கு ஒரு சமண உருவம் காணப்படு சிதது," சுண்டைக்காப்பறை : குளித்தலைக்குத் தெற்கே 3 மைல். இக் கிராமத்தில் ஒரு பாறையின் மேல் ஒரு சமணத் திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது." வெட்டுவாந்தலை; குளித்தலைக்கு வடமேற்கே 9 மைல். இங்கே மூன்று சமணத் திருமேனிகள் காணப் படுகின் றன.' 1. Top. List, P, 265. 2. Toy, Tint, P. 266. 3. Top. Link, P. 207. 4. Top. Lias, P. 269. 1. Ind. Anti. 1875. Vol. IV P.272. Top. List, P. 269. 6. Top, list, P. 269. 7. Top. List, P. 270.