பக்கம்:சமணமும் தமிழும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 131 6. புதுக்கோட்டை அம்மா சத்திரம் : அம்மா சத்திரத்துக்கு மேற்கே பள்ளிக்குகம் என்னும் ஒரு குளம் உண்டு, பள்ளிக்குளம் என்மும், சமணப்பள்ளிக்குரிய குளம் என்பது பொருள், இக் குளத்திற்கு மேற்கே 25 அடி உயரமுள்ள கற்பாறை மீது அருகக் கடவுளின் திருவுருவம் முக்குடையுடன் காணப்படுகிறது. இங்கு இரண்டு கல்வெட்டுச் சாசனங்கள் உள்ளன. இவற்றிலிருந்து இக் கற்பாறைக்குத் திருப்பள்ளி மலை என்னும் பெயர் உண்டென்று தெரிகிறது. இத் திருப்பன்னி மலைக்குரிய குளந்தான் மேற்கூறிய பள்ளிக் குளம். இப் பள்ளிக்குளத்துக்கருகில் வேறு சில சமணத் திருவுருவங்கள் சிதைந்து காணப்படுகின்றன. ஆளுருட்டி மலை : அம்மாசத்திரத்துக்கு அருகில் உள்ளது. இங்குள்ள குன்றின் மேல் இரண்டு சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இம் மலையின் குட குக்கு முன்பாகச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இச் சாசனத்தினால், இம் மலைக்குத் திருமான்மலை என்னும் பெயர் உண்டென்பது அறியப்படுகிறது. 'சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர்க்கு........ குலோத்துங்க சோழ பட்ட ணத்து பன்னிச் சந்த......... உடையார் கனகசந்திர பண்டிதர் மாணாக்கர் தன்மதேவ ஆசாரியார் பாரிசை...... பெரியபன்னி வயலில் காயனார் திருமான் மலை பாழ்வார் பள்னிச் சந்த மாய் எங்களுக்கு அர்ச்சனா போகமாய் வருகிற நிலம் இரண்டுமா,' என்பது இச் சாசனத்தின் வாசகம்' சிதைக் துள்ள வேறு சமணத் திருவுருவங்களும் இங்கு உள்ளன. நாரத்தமலை : இப்பெயர் நகரத்துமலை என்பதன் திரிபு. இரட்டைபாடி கொண்ட குலோத்துங்க சோழ நகரத்து மலை என்று பழைய சாசனம் கூறுகின்றது. பரகேசரி வர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத் துங்க சோழதேவர் காலத்துத் திருமலைக் கடம்பர் கோயில் சாசனம் இங்குன்ன சமணக் கடவுனத் திருமான்மலை அருகத் 1. P. S. I No. 474. and 367 of 1904.