பக்கம்:சமணமும் தமிழும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சமணமும் தமிழும் சோழப்பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இக்கு இருந்த செய்தி அறியப்படுகிறது. "கோனேரின்மை கொண்டான் தென்கவி காட்டாற்குத் தங்கள் காட்டுக் கல்லாற்றுப் பன்னிப் பெருகற்கின்னி சோழப் பெரும்பள்ளியாழ்வாற்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் திமந்தங்களுக்கு இவ் வூர்ப்பள்னி உடையார்கள் காணியான நிலம் முக்கால் . குடுத்தோம், இக்காட்டுச் சடையார் மலைமேல் தென்களி நாட்டுப் பெரும்பன்னி ஆழ்வாற்கு இவ்வூர்................" என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது. தேனிமலை: இதற்குத் தேனூர்மல் என்றும் பெயர் உண்டு, இக்குச் சில சமணத் திருமேனிகள் காணப்படு கின்றன. இம்மலையில் மலையத்துவஜன் என்னும் சமணத் துறவி தவம் செய்வதைக்கண்டு இருக்குவேன் என்னும் கொடும்பாளூர் சிற்றரசன் நிலம் தானம் செய்த செய் தியை இங்குள்ள சாசனம் கூறுகின்றது. அது கீழ்வரு மாறு:-ஸ்வஸ்திஸ்ரீ மலயத்துவஜன் தேவர் மலையில் தவஞ் செய்யக்கண்டு இருக்குவேள் சந்தித்து அவிப்புதஞ் செய்த நீளென் சென்னியன.' இங்குள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்றின் கீழ், * ஸ்வஸ்திஸ்ரீ. ஸ்ரீவல்ல உதன செருவொட்டி செய்வித்த திருமேனி' என்று எழுதப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் வடக்குத் தெந்து சமண முனி யாரைக் குறிக்கிறது.' கற்பாறையில் குடைந் தமைக் கப்பட்ட இரண்டு கோயில்கள் இங்கு உள்ளன, சித்தன்னவாசல் : சித்தன்னவாசல் கிராமத்திற்குக் கிழக்கே ஒரு மைலில் வடக்குத் தெற்காக ஒரு மலை உள்ளது. இம்மலை மேல் பண்டைக்காலத்தில் சமண முனி வர்கள் தவஞ்செய்துவந்தனர். இம்மலையில் கற்பாறையில் 1. P. S. I. No. 9. | 3 P. S. I, No. 4. 2. P. S. I. No. 10.