பக்கம்:சமணமும் தமிழும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138) சமணமும் தமிழும் டன. இவையெல்லாம், பண்டைக் காலத்தில் இவ்விடங் களில் சமணர் இருந்ததை 2. துதிப்படுத்துகின்றன. அம் மணல்குறிச்சி என்னும் ஊர் இங்கு உண்டு, இப்பெயர் இங்கு அமணர் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. 17. தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் : இவ்வூரில் பண்டைக் காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அக்காலத்தில் இவ்வூர்த் திருக்குளம் மிகச் சிறியதாக இருந்தது. அச்சிறு குனத் தைச் சூழ்ந்து சமணர்களின் பள்ளிகளும், மடங்களும், இலங்களும் இருந்தன. கி. பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன் னர் (அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர்). இவ்வூரில் சைவச் சமணர் காகம் உண்டாகி இங்கிருந்த சமணர்களைச் சையர் துரத்தினர். தண்டி. அடிகள், நமி கந்தியடிகன் என்னும் சைவ நாயன்மார்கள் காலத்தில் இக் கலகம் திகழ்ந்ததாகப் பெரிய புராணம் கூறுகின்றது. இக் கலகத்தின் பயனாக இச்சிறு குளத்தைச் சூழ்ந்திருந்த சமணர்களின் கட்டிடங்களும் நிலங்களும் இடித்துப் பறிக் கப்பட்டுப் பெரிய குனமாகத் தோண்டப்பட்டது. இப் போது இக்குளம் பதினெட்டு ஏக்கர் உள்ள பெரிய இடப் பாப்பைக் கொண்டுள்ளது. இக்குளத்தின் பெரும்பகுதி பண்டைக் காலத்தில் சமணரின் நிலமாக இருந்தன என் பது அறியத் தக்கது. சேந்தலை: தஞ்சைத் தாலுகாவில் உள்ள இவ்வூர் சந்திரலேகை என்று பண்டைக் காலத்தில் பேர் பெத் றிருந்தது. இக்குன்ன சுந்தரேச்சரர் என்னும் சிவன் கோயில் வெளிக் கோபு: வாயிலின் இடதுபுறச் சுவரில் உள்ள சாசனத்தால் இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும். அச் சாசனப் பகுதி இது; கோப்பா கேசரி பன்மர்க்கு யாண்டு - வது கா..... குடிப் பளியுடைய ஆரம்ப வினேன் கையெழுத்து. வட - 1. இந்தச் கலசத்தைப்பற்றி இந்நூல், 'சமண சமயம் குன்றிய பாலாறு' என்னும் அதிகாரத்திற் காண்க.