பக்கம்:சமணமும் தமிழும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயம் தோன்றிய வரலாறு

7


காலத்தில் இருந்த 24-ஆவது நீர்த்தல்காாகிய மகாவீர‍ரும் சரித்திர காலத்தில் இருந்தவர் ஆவர்.

இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி. மு. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவர். அதாவது கி. மு. 817 முதல் கி. மு 717 வரையில் இருந்தவர். இவருக்குப் பின்னர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தமான மகாவீரர் தோன்றி 72 ஆண்டுகள் உயிர்வாழ்ந்திருந்தார். இவர் கி. மு. 599 முதல் கி.மு. 527 வரையில் இருந்தவர். வர்த்தமான மகாவீரர் காலத்திலே, பெளத்தமதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் இருந்தார்கள். இவர்களில் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலி, மகாவீரருடன் ஆறு ஆண்டு ஒருங்கிருந்தார். பிறகு, மகாவீரருக்கு மாறுபட்டு ஆசீவக மதம் என்னும் புதிய மதத்தையுண்டாக்கினார். இதனால், பௌத்த மதமும் ஆசீவக மதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விருமதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகிறது.

சமண சமயம் பிற்காலத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிவுண்டது. அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என்பன. சுவேதாரம்பர சமணத் துறவிகள் வெண்ணிற ஆடை அணிவர். இவரது ஆலயங்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கும் வெண்ணிற ஆடை உடுத்துவர். சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்பது பொருள், திகம்பர சமணத் துறவிகள் ஆடை அணியமாட்டார்கள், கௌபீனமும் உடுத்தமாட்டார்கள். திகம்பரர் என்றால் திசைகளை ஆடையாக உடுத்தவர் என்பது பொருள். (திக்+அம்பரம் = திகம்பரம்) அதாவது உடையின்றி இருப்பவர். இவரது கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களும் ஆடையுடுத்தப்பெறாமல் திகம்பரமாகவே (அம்மணமாகவே) இருக்கும். சுவேதாம்பர சமணரும் திகம்பா சமணரும் உருவ வழிபாட்டினர். ஸ்தானகவாசி சமணருக்கு உருவ வழிபாடு உடன்பாடு அன்று; அவர்கள் தமது கோயில்