பக்கம்:சமணமும் தமிழும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 153 இது இந்துக்களின் மலையாக மாறிவிட்டது. இந்தச் செய்தியைப் பிற்காலத்தவர் கதையாகக் கற்பித்துப் புரா ணம் எழுதிவிட்டார்கள். அது தான் திருவிளையாடற் புரா ணத்தில் யானை எய்த படலம் என்பது. மதுரைமா நகரத்தை அழிக்கும் பொருட்டுச் சம ணர்கள் தமது மந்திர சக்தியால் ஒரு பானையை உண்டாக்கி அனுப்பினார்கள் என்றும், சோமாந்தாச் சுடவுள் அந்த யானையை கரசிங்க அம்பு எய்து கொன்றார் என்றும், கொல்லப்பட்ட அந்த யானை மலையாகச் சமைந்துவிட்டது என்றும் இப்புராணக்கதை கூறுகிறது. இப்புராணத்தின் உள் பொருள் என்னவென்சல், யானை மலையில் சமணர் இருந்தார்கள் என்பதும் அவர்கள் மதுரையில் அதிக செல்வாக்குடையவராக இருந்தார்கள் என்பதும் அவர்கள் செல்வாக்கைபடக்க அவர்கள் இருந்த பானை மலைமீது காசிக்கப் பெருமாள் கோயில் அமைக்கப்பட்டதென்பதும் தகும். நாகமலை : இதுவும் ம.திரைக்கு அருகில் உள்ள ஒரு மல், பாம்பின் உருவத்தை ஒத்திருப்பதனால் இந்தமலக்கு காகமலை எனப்பெயர் உண்டாயிற்று. இந்த மலையின் மேலும் சமண முனிவர்கள் பண்டைக்காலத்தில் இருத் தனர். பிற்காலத்தில் இங்கிருந்த சமணமுனிவர்களை "இந்து சமயத்தார்" திரத்திவிட்டனர். பிறகு ஒருபுரா ணக் கதையைச் சற்பித்துக்கொண்டு, தாகமெய்தபடலம்' என்று பெயரிட்டனர். சமணர், மதுரைமா காத்தை அழிப்பதற்காக ஒருபெரிய பாம்பைத் தமது மந்திரசக்தி பினால் உண்டாக்கி அதை மதுரை நகரத்தில் ஏவினார்கள் என்றும் சொக்கநாதப் பெருமான் அந்தப் பாமபை அம்பு எய்து கொன்றார் என்றும் இறந்த அந்தப் பாம்பு கல்லாகச் சமைத்து விட்டது என்றும் அப்புராணம் கூபசிறது, பானை மலை காகமல்பைப் பற்றிய கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டதைச் சில புராணக்கதைகள்' என்னும் தொடர்புரையில் காண்க.