பக்கம்:சமணமும் தமிழும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

161 சமணத் திருப்பதிகள் அருகில் உள்ள சாயர்புரத்துச் சாலையோரத்தில், வர்த்த மான மகாவீரரின் திருவுருவம் வீற்றிருக்கும் கோலத் திடன் காணப்படுகிறது, சிதைந்து போன இன்னொரு சமணத் திருவுருவம், இவ்வூர் வயலில் காணப்படுகிறது.! நிகராகரப் பெரும்பள்ளி: ஸ்ரீ வைகுண்டம் தாலு காவைச் சார்ந்த பெருங்குளம் என்னும் ஊரில், இந்த சமணப் பள்ளிக்குரிய நிலங்கள் இருந்தன, பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டா னுடைய 15-வது ஆண்டில் எழுதப்பட்ட ஒரு சாசனம், இவ்வூர் மாயக்கூத்தப் பெருமான் நிலத்தை இப் பன்னிக் குரிய பள்ளிச்சந்த சிலத்துடன் மாற்றிக்கொள்ளப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இந்த நிலங்களுக்கு அருகில், இந்த திசராகரப் பெரும்பள்ளி இருந்திருக்கவேண்டும். அருகமங்கலம்: ஸ்ரீ வைகுண்டம் தாலுகா மாறமங் கலத்தில் உள்ள வீற்றிருந்த பெருமாள் கோயில் சாசனம் ஒன்று, அருகமங்கலம் என்னும் ஊரைக் குறிப்பிடுகிறது : திருநெல்வேலி தா றுகாவில் அருகன்குளம் என்னும் ஊர் உள்ளது. இப் பெயர்களே இங்கு முற்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன, திருச்செந்தூர் தாதுகாவில் ஆதிநாதபுரம் என்னும் ஒரு ஊர் உண்டு, ஆதிநாதர் என்பது ரிஷப தீர்த்தங்கரரின் பெயர் ஆகும். ஆகவே, இதுவும் முற்காலத்தில் சமணர் கிராமமாக இருந்திருக்க வேண்டும், கழுதமலை ; ஜயதுர்காவில் என்று வழங்கப்படு கிறது இக் கிராமம். இது கோவில்பட்டி தா துகாவில் உள்ளது. சங்கரநயினார்கோவிலுக்குக் கிழக்கே 11, மைலில் உள்ளது. இங்குள்ள மலைப்பாறையில் நூற்றுக் கணக்கான சமணத் திருவுருவங்கள் கற்பாறையில் அமைக் கப்பட்டுள்ளன. நூத்துக் கணக்கான சாசனங்களும் இங்குக் காணப்படுகின்றன. இதற்கு வெட்டுவால் சோயில் 1. Ep. Rep. 1916-37, P. 54. 2, 2430 of 1:32-33, 3, 5, 1. 1. Vol VIII. No. 152, 5. த.-11