பக்கம்:சமணமும் தமிழும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 165 வள்ளியூர் : நாக்கு கேரிக்குத் தென்மேற்கில் 8மையில் உள்ளது. இவ்வூர் உள்ளியூர் என்றும் வழங்கப் படும். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகும் சாலையின் மேற்குப்புறத்தில் உள்ளது. இக் கிராமத்தில் ஒரு சமணக் கோயில் இருந்தது. இக்கோயில் கற்களைக் கொண்டுபோய், இவ்வூரில் உள்ள பெரியகுளத் திற்குப் படியாகக் கட்டிவிட்டார்கள். சமணத் திருமேனி பாட்டும் அவ்விடத்திலேயே இருந்தது. பிறகு போஸ்ட் ஆபீஸ் உத்தியோகஸ்தராக இருந்த ஒரு சமணர் இந்த விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு போனார். இப்போது இந்த விக்கிரகம் பிஷப் சார்ஜண்ட் அவர்களிடம் இருக்கிற தென்று நம்புகிறேன் என்று . பி. 1882-ல் ஒருவர் எழுதியிருக்கிறார்.. இப்போது இது எங்கிருக்கிறதோ? 11. கொங்கு நாடு : சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்கள் சேலம்: சேலம் மாவட்டத்தின் தலைக்கரம். இவ்வூர் ஆற்றங்கரையில் ஒரு சமணத் திருவுருவம் கிடக்கிறது, இன்னொரு சமணத் திருவுருவம், கலெக்டர் வீட்டுக்கும் சர்ச்சுக்கும் இடையே உள்ள வழியில் இருக்கிறது.' அதமன் கோட்டை : தர்மாபுரி தாலுகாவில் சர்மா புரிக்கு மேற்கே மையில் உள்ளது. இவ்வூரில் இரண்டு சமணக் கோயில்கள் உள்ளன. இக்கோரி துக்கு அருகில் ஒரு சமணத் திருமேனி காணப்படுகிறது.* தர்மாபுரி : தர்மாபுரி தாதுகாவின் தலைசகர், நர்மா புரியின் பழைய பெயர் தகடூர் என்பது. இங்கு மல்லி கார்ச்சனர் கோயில் இருக்கிறது. மல்லிகார்ச்சுனர் என் பது மல்லிநாதர் என்னும் சமண தீர்த்தங்கரரைக் குறிக்கும். இவ்வூருக்கு அருகில் உள்ள ராமக்கா குனக் கரையில் உன்மா சமண உருவங்கள் இவ்வர் சமணத் திருப்பதி என்பதைத் தெரிவிக்கின் றன. மல்லிகார்ச்சனர் 1. Top. Lisb. P. 815, 2. J. A. S. B. XIV. Page 76. 3. Top. List. P. 196,