பக்கம்:சமணமும் தமிழும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ச. சில புராணக்கதைகள் சில புராணக் கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ் வேறு விதமாக வழங்கிவந்தன என்பது ஆராய்ச்சியினால் அறியப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை ஆராய்வோம். ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி என்னும் சைவசமய நூலினாலும் அதன் பழைய உரையினாலும் சில செய்திகள் அறியப்படும். இந்தப் பரணி தலில், கோயில் பாடியது, 70-வது தாழிசையில் இச்செய்தி கூறப்படு கிறது. ( மலைகொண் டெழுவார் கடல் கொண்டெழுவார் மிசை வந்த சிலரவருடஞ் சொரிவார் சிலைகொண் டெமுவார் கொலைசொண் டெழுதற் வேரித் பிறர் பாவர் சோசரரே. இதற்கு, பெயர் அறியப்படாத பழைய உரை யாசிரியர் கூறுவதாவது: * யானைமலை நாகமலை யென இரண்டு மலை உளவென அலையிற்றைக் காட்டி, 'பண்டு இவை அமணர் மந்திரவாத வலிகாட்டின மலைகள், மதுரையை ஒருமலை பாகாபா பழிக்கவும் அவ்வியானே மதுரையில் வருவ தன்முன் இந்த மலை மகாகாகமாய் அந்த பானையை விழுங்கவுங் காட்டி உயிர் பெறுத்தி நடத்தியா, என் சுவாமி (பாண்டியன்) சாதுவா தலிற் பயப்பட்டு இம் மகா ஈகரத்திற் புக்கனர். பின்பு எழுகடலுக்கு மாமுக மதுரையில் எழுகடலெனக் காட்டின இந்திரசாலமுமுண்டு. உதையூரில் கல் வருஷ மும் (வருஷம் - மழை) மண் வருஷ மும் பெய்வித்து அதனைக் கெடுத்துத் துரோகமுஞ் செய் தார் இவர் (சமணர்) அதற்குப் பின்பு இராசதானி திருச் சிராப்பள்ளி யாய்த்து" என்றவாறு, இதில் சமணர் செய்ததாக மூன்று செய்திகள் கூறப் படுகின்றன, 1. மதுரைக்கு அருகில் உள்ள இரண்டு மலைகளில் ஒன்றை ஆனையாகவும் இன்னொன்றை மலைப் பாம்பாகவும் அமையச் செய்து அவற்றிற்கு உயிர்