பக்கம்:சமணமும் தமிழும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சில புராணக்கதைகள் 189 கொடுத்து யானையைப் பாம்பு விழுங்குவது போல் செய்து பாண்டியனுக்குச் சமணர் காட்டினர். 2 ஏமுகடல்சுவாயும் ஓர் இடத்தில் வரும்படி செய்து அதனைப் பாண்டிய னுக்குக் காட்டினர். 3. உறையூரில் கல்மழை மண்மழை பெய்யச் செய்து சமணர் அவ்வூரை அழித்தனர். இவற்றை ஆராய்வோம் : பண்டைக் காலத்திலே, மதுரையைச் சூழ்ந்துள்ள எட்டு மக்களிற் சமண முனிவர் எண்னிறந்தோர் தவஞ்செய்திருந்தனர் என்பது சைவ சமய நூல்களினாலும், சமணசமய நூல்களினாலும் இந்த மலைகளில் உள்ள குகைகளில் காணப்படும் கல்வெட்டுகளா ஓம் பிற சான் துகளாலும் தெரியவருகிறது. இந்த எட்டுமலைகளில் பானை மலை நாசமம் என்பவையும் சேர்த் தவை. யாக்க தனது முன்னங்கால்களை நீட்டிப் படுத் திருப்பதுபோன்று காணப்படுவதாலும், பாம்பு போன்று காணப்படுவதாலும் இந்த மலைகளுக்கு முறையே பானை மலை, நாகமலை எனப் பெயர் அமைந் தன போலும். இந்த மலைகளிலும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் தங்கித் தவஞ்செய்தி வந்தனர் என்பதற்குச் சான்றுகளை இந் நூல் 40-ஆம் அதிகாரத்தில் கூறினோம். இந்த மலைகள் நாகமும் யானையும் போன்று காணப்படுவதாலும் இம்மலைகளில் சமண முனிவர் இருந்தமையாலும் இந்துக்கள், சமணர் மேல் பழிசமத்தும் நோக்கத்துடன், பாம்பு பானையை விழுங்குவது போன்று சமணர் மந்திரசாலம் செய்தார்கள் என்று கதை கட்டினார்கள் போலும் திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில், 'பானமாமலைபாதியாய இடங்களில்' சமண முனியர் இருந்தனர் என்று கூறியுள்ளனர். ஆனால், அவர் பாம்பு யானையை விழுங்கும்படிச் சமணர் செய்து காட்டியதாகச் சொல்லப்படும் கதையைக் கூறவில்லை. அவர் காலத்தில் இந்தக் கதை வழங்கப்படவில்லைபோலும், அக்காலத்தில் இக்கதை வழங்கியிருந்தால், ஞானசம்பந்தர் இச்செய்தியையும் கூறியிருப்பாரன்றோர் எனவே, சம்பந்தர் காலத்தில், கி.பி. 7-ஆம் பற்றாண்டில் வழக்காத இக்கதை, ஒட்டக்கூத்தர் காலத்தில் (கி. பி. 12-ஆம் நூற்றாண்டில்)