பக்கம்:சமணமும் தமிழும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சில புண்ணக்கதைகள் 191) பையும் மதிப்பையும் உண்டாக்கிற்றுப்போலும், சமணர் மனித ஆற்றலுக்கும் மேற்பட்ட தெய்வ சக்தியும் மர்திர சக்தியும் உள்ளவர் என்னும் எண்ணத்தைப் பாமர மக்களுக்கு இக்கதைகள் உண்டாக்கிவிட, அவர்கள் சமணடை கன்கு மதித்தனர் போலும், ஆசையால், சமணர் செய்ததாக முதலில் கற்பிக்கப்பட்ட இக்கதை சக மாற்றிச் சிவபெருமான் தமது கற்றல் தோன்றச் செய்த திருவின் பாடல்கள் என் ச கூறிப் பிற்காலத்தில் புராணங்கள் எழுதிக்கொண்டார்கள் போலும். பானையைப் பாம்பு விழுங்குவது போல் சமணர் காட்டி னார்கள் என்னும் கதையை இரண்டாகப் பகுத்து, மதுரையான திருவிளையாடல் என்றும், யானை எய்த திரு விளையாடல் என்றும் பிற்காலத்தில் திருவிளையாடல் புரா ணத்தில் கூறப்படுகின்றன. மதுரையை அழிக்கச் சமணர் பாம்பை யுண்டாக்கி அனுப்பினர் என்றும் அதனைச் சிவன் அம்புவிட்டுக் கொல்ல அப்பாம்பு விஷத்தைக் கக்கிற்று என்றும் பிறகு சிவன் தமது சடையில் உள்ள மது வெள்ளத்தை விஷத்தின் மேல் தெளித்து விஷத்தை மது வாக்கினபடியால் அவ்ஆருக்கு மதுரை எனப் பெயர் ஏற்பட்டதென்றும் கதை கற்பித்தனர். அவ்வாறே, சமணர் பானையை யுண்டாக்கி மதுரையை அழிக்க ஏவினர் என்றும் சிவபிரான் அதை அம்பெய்து கொன்சர் என்றும் இன்னொரு கதையையும் கற்பித்துக்கொண்டனர். பாண்டியன் அச்சுறுத்தி வசப்படுத்தச் சமணர் எழு கடல்கள் அழைத்துக் காட்டினர் என்று கூறப்பட்ட கதை, பிற்காலத்தில் சிவபெருமான் செய்ததாக யாற்றி அமைத்துக்கொண்டு, எழுகடலழைத்த திருவிளையாடல் என்று பெயர் கொடுத்தனர். இதில், பாண்டியன் மகளான தடாதகைப் பிராட்டியாரைச் சிவபெருமான் மணஞ்செய்த பிறகு தடாதசையின் தாயார் ரோடுதற்பொருட்டுச் சிவ பிரான் தமது கற்றலினால் எழுகடல்கள் மதுரைக்கு வா வழைத்துக்கொடுத்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது,