பக்கம்:சமணமும் தமிழும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் அறம் அன்றோ ? ஆகவே, அன்ன தானத்தை முதல் தான மாகச் செய்துவந்தனர். இரண்டாவதாகிய அடைக்கல் தானத்தையும் சமணர் பொன்போல் போற்றிவந் தனர். அச்சங்கொண்டு அடைக் காம் என்று புகல் அடைந்தவருக்கு அபயமளித்துக் காப்பது அபயதானம் என்பது. இதற்கென்று குறிப் பிட்ட சில இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் பெரும் பாலும் சமணக் கோயில்களை அடுத்திருந்தன. இந்த இடங்களுக்கு அஞ்சிஜன் புகலிடம் என்பது பெயர். இந்த இடங்களில் புகல் அடைந்தவரைச் சமணர் காத்துப் போற் றினார்கள். சாசனங்களிலும் இந்தச் செய்தி கூறப்படு கிறது. தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிஜார் தாலுக்காவில் பன்னிச்சந்தல் கிராமத்துக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் கிராமத்து வயலில் இச்செய்தியைக் கூறுகித சாசனம் ஒன்று காணப்படுகிறது." ஜம்பை என்னும் கிராமத்துக்கு வீரராசேந்திரபுரம் என்று பெயர் இருந்ததென்றும், இங்குக் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்லும் சமணக் கோயில் இருந்ததென்றும், அங்குச் சோழதுங்கள் ஆனவந்தான் அஞ்சி ஓன் புகலிடம் என்று பெயர் உன்ன ஒரு புகலிடம் இருந்ததென்றும் அப்புகலிடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தவரைக் காப்பாற்றவேண்டும் என்பது கண்டராதித்தப் பெரும்பன்னியில் எழுந்தருளி யிருந்த நேமிநாதசுவாமி ஆணை என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது, வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகா தென்ளாறு என்னும் ஊரிலே திருமூலீஸ்வரர் கோயில் முன்மண்டபத்தின் தரையில் ஒரு சாசனம் காணப்படு கிறது. மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய தேவரின் 5-ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம் அஞ்சி தன் புகலிடம் ஒன்றைக் குறிப்பிடு கிறது. 1. 448 of 1937-38, Ep- Rep. 1987-39, Pags 89. 2. 22 of 1934-35.