பக்கம்:சமணமும் தமிழும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் சிறப்படைந்த வாலாறு 43 வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா கீழ்மின்னல் என்னும் ஊரில் உள்ள ஒரு சாசனம், சகல லோக சக்கரவர்த்தி வென்று மண்கொண்டார் என்னும் சாம்புவராயர் அரசகுடைய 16-ஆவது ஆண்டில் எழுதப் பட்டது. அக்காலத்தில் இந்த ஊர் அஞ்சிஜன் புகலிடமாக இருந்த செய்தியை இச்சாசனம் கூறுகிறது.' வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா வட மகாதேவிமங்கலம் என்னும் ஊரில் உள்ள சாசனம், சாம்புவராயர் சகலலோக சக்கரவர்த்தி பாஜநாராயண ஓடைய 19-ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இது, மகாதேவிமங்கலத்தைச் சேர்ந்த தனிகின்று வென்சன் நல் சார் என்னும் இடம் அஞ்சிஜன் புகலிடமாக இருந்தது என்று கூறுகிறது. இதனால் அப்பதானத்தைப் பண்டைக் காலத்தில் சமணர் தடைமுறையில் செய்துவந்தனர் என்பது ஐபமத விளங்குகிறது. மூன் முல தாகிய ஒனடத தானத்தையும் சமணர் செய்துவந்தனர். பௌத்தர்களைப் போலவே, சமணப் பெரியார்களும் மருத்துவம் பயின்று சோயாளிகளுக்கு மருந்து கொடுத்து கோயைத் தீர்த்துவந்தனர். சமணர் தம் மடல்களில் இலவசமாக மருந்து கொடுத்து மக்க வின் கோயைத் தீர்த்தது அம்மதத்தின் ஆக்கத்திற்கு தேவியாக இருந்தது. சமணர்கள் மருத்துவம் பயின்று மருந்து கொடுத்து நோய்நீக்கிய செய்தி, அவர்கள் இயற்றிய நால்கள் சிலவற்றிற்குத் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்ச மூலம் என்று மருந்துகளின் பெயரிட்டிருப்பதனாலும் அறியப்படும். உடல் கோயைத் தீர்க்க மருந்து கொடுத்தும் உளநோயைத் தீர்க்க நூல்களை இயற்றிக் கொடுத்தும் சமணர் மக்களுக்குத் தொண்டாற்றிவந் தனர். நான்காவதாகிய சாத்திர தானத்தையும் சமணர் பொன்னேபோல் போற்றிவந்தனர். சமணப் பெரியோர், 1, 33 of 1983-34. 2. 52 of 1!1R3-31, 5. I. Epi, tap. 1:13:-31, Pags 37.