பக்கம்:சமணமும் தமிழும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் கூறுகின்றன. தமிழ்நாட்டுச் சாசனங்களிலும் குரத்தியர் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில வருமாறு ஸ்ரீமிழலூர்க் குரத்திகள், சிறியிசயக் குத்தி யார், திருச்சாணத்துக் குரத்திகள், கால்கர்க் குரத்திகன், இனகேச்சாத்துக் குரத்திகள், ஸ்ரீமம்மை குரத்திகள் மாணக்கியார் அரிட்டசேமிக் குரத்திகள், ஸ்ரீபட்டினிப் படாரர் மாணாக்கிகள், திருப்பருத்திக் குத்திகள், பேரூர் குரத்திகன் மாணாக்யோர் மிழலூர்க் குரத்திகள், கடற் குரத்தியார், வேம்புகாட்டுக் குத்தி, கனகவிரக் குத்தி யார், பிருதிவிடங்கக் குலத்தி. சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சமணசமயம் பாவுவதற்காகப் பெரிதும் உழைத்து வந்தார்கள், தமிழ் நாட்டிலே சமணசமயம் பாவுவதற்கு இன் னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டை பாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர ஏனைய தொழில்களை எல்லாம் இந்தச் சமயம் சிறப்பித்துப் போற்றி வந்தது. மிகச் சிறந்த தொழி வாகிய பயிர்த்தொழிலை, பிராமண மதம் எனப்படும் -வை தீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வு படுத்தியது போலல்லாமல், சமணசமயம் பயிர்த்தொழிலை மிகச் சிறந்த தொழில் என்று போற்றியது. பயிர்த் தொழில் செய்யும் வேளாளகும், வாணிபம் செய்யும் வணிகரும் ஏனைய தொழிலாளரும் இந்த மதத்தை மேத் கொண்டிருந்தனர். எந்காட்டிலும் எக்காலத்திலும் பொரு சாதாரத்துறையில் செழிப்புற்றுச் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருப்பவர் வாணிகரும், விவசாயிகளும் ஆவர். இவர்கள் சமண சமயத்தைச் சேர்த்திருந்தபடியால் ஏனைய மக்களும் இச்சமயத்தைத் தழுவவாமாயினர். சேர சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களில் பலர் சமண சமயத்தைச் சேர்ந்திருந்தனர். இவர்களால் சமணசமயத்துக்கு ஆதர வும் செல்வாக்கும் ஏற்பட்டன. இந்த மதத்தின் செல்வாக் தைக் கண்டு, சமண சமயத்தவ ரல்லாத அரசரும்கூட, சமணப் பள்ளிகளுக்கும் மடங்களுக்கும் நிலபுலங்களையும்