பக்கம்:சமணமும் தமிழும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. சமயப்போர் பல காற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆருகத மதம் தமிழ்நாட்டில் கால்கொண்டு செல்வாக்குப் பெற்றிருந்தது என்று கூறினோம். இதனால், வேறு மதங்கள் அக்காலத் தில் இல்லை என்று கூறியதாகக் கருதவேண்டா. அக்காலத் சில் வேறு சில மதங்களும் இருந்தன. அவை, 'வைதீக மதம்' எனப்படும் பிராமணிய மதமும், தேரவாதம்' எனப்படும் பொத்தமதமும், மற்கலியுண்டாக்கிய ஆசீவக மதமும் அரும், சமண மதத்தைப் போன்றே இலையும் வடநாட்டில் தோன்றிப் பின்னர், தென்னாட்டிக்கு வந்தவை. இம்மதங்களை பன்றித் தமிழரின் மதம் ஒன்று தனியாக இருந்தது. இந்தத் தமிழர் மதத்தைத் திராவிட மதம்' என்னும் பெயரால் குறிப்போம். இத் திராவிட மதத்தைப் பற்றிப் பின்னர், உரிய இடத்தில் விளக்கிக் கூறுவோம். மேற்சொன்ன ஆருகதம், வைதிகம்,' பௌத்தம்,' ஆசிவகம்' ஆகிய நான்கு வடநாட்டு மதங்களும் அடிகாள் தொடங்கி ஒன்செடொன்று பகைத்துப் போரிட்டு ஒன்றையொன்று அழிக்க முயற்சி செய்துவந்தன. இந்தச் சமயப்போர் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலந்தொட்டு நடந்துவந்தது. அகையால், இந்த மதப் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றினை தராயவேண்டுவது நமக்குக் கடமை யாகின்றது. இதனைச் சுருக்கமாக ஆராய்வாம். தென்னாட்டில் நடைபெற்ற வடநாட்டுச் சமயப் போரில் ஆரியாமதம் முதன் முதல் ஆற்றல் குன்றி அழிந்துவிட்டது.' ஆகையால், வைதிகம், பொத்தம், ஆருகதம் என்றும் மூன்று மதங்கள் மட்டும் கெடுக்காலம் வரையில் போரிட்டுப் பூசல் வினைத்துவத்தன. 1. ஆவா மதத்தின் வரலாற்றினை இந்தமாதிரியர் எழுதி யுள்ள பெளத்தழம் தமிழம் என்னும் நூலில் காண்க.