பக்கம்:சமணமும் தமிழும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் குன்றிய வரலாறு 65 ‘பிறவியால் வருவன கேனே ஆதலாற் பெரிய இன்பத் துறவியார்க் சல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கினயே! மறவல், மார்க்கமே கண்ணினாய், தீர்த்த நீர் மல்கு சென்னி அறவனர் அரூர் தொழுதுய்யலாம் மையல் கொண்டஞ்சல் (செஞ்சே .' * தந்தை தாய், தன்னுடன் தோன்றினர், புத்திரர், தாரம் என்னும் பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்துபோச்கீல் எனப் பற்றினயே! வெந்த முடியார் ஆதியார் சோதியார் வேதசிதர் எந்தை ஆரூர்தொழுது உய்யலாம் மையக்கொண்டஞ்சல் (செஞ்சே ' (சம்பந்தர்- 11 திருவாரூர் ) இவ்வாறு, துறவறத்தாரும் இல்லறத்தாரும் ஆண் பாலரும் பெண் பாலரும், கடவுள் மாட்டுப் பக்தி மட்டும் செய்வாராயின் அவர்களுக்கு மோட்சம் உண்டு என்று இந்திம தம் பறை சாற்றியது. இவ்வனை எளிய முறையில் யாதொரு வருந்தமுமின்றி வீட்டுலகத்திற்குச் செல்ல வழிபைக் காட்டினால் அதனை மக்கள் விரும்பாதொழி வரோ ? புதிய இந்துமதம், 'பத்தியால் முத்தி எளிதாகும்' என்னும் எளிய வழியைக் காட்டி செல்வாக்குப் பெற்றது. எளிய வழியைக் காணப்பெற்ற மக்கள், இதற்கு மாமுக உள்ள, மனைவி மக்களை வீட்டு உலக இன்பல் சளைத் அறந்து ஐம்புலன்களையும் அடக்கிக் கடுந்தவம் புரிந்து இருவினையும் கெடுத்து ஞான வீரனாய் வீட்டுவசத்தை வெற்றியோடு கைக்கொள்ளும் சமண மோட்ச வழியைப் பின்பற்றவரோ? ஆகவே, உலகம் 'பத்தி' செய்து முத்தி' பெற இந்துமதத்தைப் பின்பற்றத் தொடங்கியது. ஆகவே, இந்துமதத்தின் பத்தி இயக்கம் சமண சமயத்தின் செல்வாக்கைப் பெரிதும் குறைத்துவிட்டது என்று துணிந்து கூறலாம். ஆனால், இந்து மதத்தின் பத்தி இயக்கம் ஒன்றின. லேயே சமணசமயம் தனது முழுச் செல்வாக்கையும் இழந்துவிட்டதாகக் கருதவேண்டா. சமணசமயத்தின் செல்வாக்கையழிக்க இந்துமதத்தார் வேறு முறைகளையும்