பக்கம்:சமணமும் தமிழும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் குன்றிய வரலாறு 73 அவர்கள் மீது பழி சுமத்தியதையும் மற்றும் அபவாதங்களையும் இந்நூலில் மற்றோர் இடத்தில் காண்க. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே செஞ்சி வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு செய்தியைக் கூறி இதனை முடிப்போம். கி. பி. 1478-இல் செஞ்சிப் பிரதேசத்தை அரசாண்டவன் வெங்கடபதி நாயகன் என்பவன். இவனுக்குத் துமால் கிருஷ்ணப்ப நாயகன் என்னும் பெயர் உண்டு, இவன் விஜயநகர மன்னருக்கு உட்பட்ட தெலுங்கு இனத் தவன், இவன், உயர்ந்த குலத்தவரான ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு மனைவியை மணக்கவேண்டும் என்று எண்ணங்கொண்டு, முதலில் உயர்ந்த குலத்தவரான பிராமணர்களை அழைத்து, தனக்கு ஒரு பிராமணப் பெண்ணை மனைவியாகத் தரவேண்டும் என - கேட்டான், தங்களை விடத் தாழ்ந்த இனத்தவனாகிய இவனுக்குப் பெண் கொடுக்கப் பிராமணர் இசையவில்லை. மறுத்துக் கூறவும் முடியவில்லை. ஏனென்றால் இவன் நியாய அநியாயம் அறியாத மூர்க்கன். ஆகவே, பிராமணர்கள் இந்தத் தர்ம சங்கடத்திமிருந்து தப்பித்துக்கொள்ள வும், சமணர்களைச் சங்கடத்திக்குள்ளாக்கி விடவும் யோசனை செய்து, அரசனிடம் சென்று, சமணர்கள் பிராமணர்களைவிட உயர்ந்த இனம் என்று சொல்லிக் கொள்கிறார்கள், ஆகவே, முதலில் அவர்கள் பெண் கொடுத்தால் பிறகு எங்கள் இனத்தில் பெண் கொடுக்கிறோம்," என்று கூறினார்கள். அரசன் சமணரை அழைத்துத் தனக்கு ஒருத்தியை மனைவியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டான், தாழ்த்த இனத்தானாகிய இவனுக்குச் சமணர் பெண் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், மூர்க்கனாகிய இவனிடம் மறுத்துக் கூறினால் துன்பம் செய்வான் என்று அஞ்சினார்கள். கடைசியாக அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். சமணப் பிரபு ஒருவரின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த வீட்டுக்குக் குறிப்பிட்ட ஒரு நாளில் அரசர் வந்தால் பெண்ணை மணம் செய்து கொண்டு போகலாம் என்று தெரிவித்தார்கள். அரசனும் அவ்வாறே பரிவாரங்க