பக்கம்:சமணமும் தமிழும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் குன்றிய வரலாறு 75 செஞ்சி அரசன் அக்காட்டுச் சமணர் தலயை வெட் டிய காலத்தில், வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர் களில் கால்சேய உடையார் என்பவர் ஒருவர். இவர் திண்டிவனத்துக் கடுத்த தாயனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் உடையார்பான்பம் குறுநில மன்ன ரிடம் அடைக்கலம் புகுந்தார். குறுநிலமன்னர் இவருக்கு சிலபுலங்கள் அளித்த ஆதரித்தார். உடையார்பாளையத் தில் தங்கியிருந்த காங்கேய உடையார், சிலகாலங் கழித்து மைசூரில் உள்ள சிரவண பெள்கொௗ மடத்துக்குச் சென்று அங்கிருந்த வீரசேனாசாரியாரை அழைத்துக் கொண்டு செஞ்சிக்கு வந்து அங்கு மதம் மாறியிருந்த பழைய சமணர்கள் மீண்டும் சமண மதத்தில் சேர்ப் பித்தார். விரசேனாசாரியார், சமண முறைப்படி அவர் களுக்குப் பூணல் அணிவித்துத் திக்கை கொடுத்துச் சமணர் ஆக்கினார். காக்கேய உடையார் பரம்பரையினர் இன்றும் தாய ஊரில் இருக்கின்றனர். செஞ்சிப் பகுதியில் மறைந்து போன சமண மதத்தை மீண்டும் புதுப்பித்தவரின் பரம் பரையினராசையால், இவர்களுக்கு இங்குள்ள சமணர், திருமணம் முதலிய காலங்களில் முதல் மரியாதை செய்து வருகின்றனர். இவ்வாதெல்லாம் சமணர் பற்பல காலத்தில் பற்பல துன்பங்களை அடைந்தார்கள். ஆனால், பௌத்த மதம் தமிழ்காட்டில் அடியோடு அழித்துவிட்டதுபோல சமண மதம் முழுவதும் மறைந்துவிடவில்லை. சமணர் தமிழ் நாட்டில் இன்றும் சிறு தொகையினராக இருந்து வரு கிரார்கள். சமயப்போர் கடுமையாக கடந்த காலத்திலும் சமண சமயம் குன்றிய காலத்திலும் சமணரிற் பெரும்பாலோர் இந்து மதத்தில் சேர்த்து சைவராகவும் வைணவராகவும் மதம் மாறிவிட்டனர். இவ்வாறு இந்து மதத்தில் புகுந்த சமணர் வாளா வெறுங்கையோடு வந்து விடவில்லை. சைவ