பக்கம்:சமணமும் தமிழும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் 79 விதத்தில் சமணரின் இக்கொள்கை இந்தமதத்தில் சேர்த்து விட்டது. பௌத்தர்களும் ஊனுண்ணக் கொள்கையுடையவர். ஆனால், அவர்கள் கொல்லாமையை மட்டும் வற்புறுத்திக் கூறி ஊனுண்ணாமையை அதிகமாக வற்புறுத்தாது விட்டனர். சமணரோ கொல்லாமை, ஊன் உண்ணாமை ஆகிய இரண்டையும் வற்புறுத்தியதோடு, இவற்றைத் சமது மதத்தின் முதன்மையான கொள்கையாகவும் கொண்டனர். ஆகலால், சமணர்களாலேயே இந்தக் கொன்கை நமது நாட்டின் அதிகமாகப் பாவித்து என்று கருதலாம். ஊன் உணவு அல்லாத காய்கறி" உணவுக்கு இப் போது சைவ உணவு என்று பெயர் கூறப்படுறது, சமண சமயம் செல்வாக்குற்றிருந்த பண்டைக்காலத்திலே “மாக் கறி உணவுக்கு ஆருகத உணவு என்று பெயர் வழங்கிய தாகத் தெரிகிறது. இலங்கையில் உள்ள தமிழர் என் * காய்கறி உணவை இப்போதும் ஆரத உணவு சான்று வழங்கிவருகின் றனராம்', ஆரத உணவு என்பது ஆருகத உணவு என்பதன் திரிபு. தீபாவலி : இது சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தக்காரரான வர்த்தமான மகாவீரர், பாலாபுரி நகரத்திலே அவ்வூர் அநசனுடைய அரண்மனையிலே தங்கியிருந்தபோது, அல் குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தருளினர். இரவு முழுவதும் கடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப்பொழுது ஆன படியினாலே, சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டி ருந்த மக்கள் அனைவரும் சத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர், வர்த்தமான மகாவீரரும், நாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்தபடியே வீடுபேறடைந்தார். பொழுது விடிந்து எல்லோரும் விழித் தெழுந்து பார்த்தபோது, மகாவீரர் வீடுபேறடைந்திருப் 1. ஸ்ரீபுராணம், பன்முகம், பக்கம் xxii. .ே