பக்கம்:சமணமும் தமிழும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு போசனை செய்து, உலகத்திற்கு ஞானவொளியாகத் திகழ்ந்த மகா வீரசை மக்கள் நினைவு கர்த்து வழிபடும் பொருட்டு, அவர் வீடுபெற்ற நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழாக்கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்த விழா தீபாவம் என்னும் பெயரால் கொண்டாடப் - படுகிறது. (நீபம் = வினக்கு, அவலி வரிசை.) மகா விர் விடியற்காலையில் வீடுபேறடைந்தபடியால், தீபாவலி விடியற்காயில் கொண்டாடப்படுகிறது. விடியற்காகயில் கீராடிய பின்னர் திருவிளக்கேற்றி தீபாவம் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ? -சமணசமயம் விழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருவாரியாக இந்தமதத்தில் சேர்த்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள், தாம் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவவியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்கமுடியாத இந்துக்கள், இதைத் தாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக்கொண் டார்கள், திருமால் காகாசானைக் கொன்றார் என்றும், அவன் இறந்தாானக் கொண்டாடுவதுதான் நீபாவலிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்த மானது அன்று, அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி, மறுநாள் குரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்கள் கடை முறையில் கொண்டிருந்த வழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறடைந்த திருகாள் தீபாவலி என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொன்ன வேண்டிய நிலை ஏற்பட்டபிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொன்ன மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக்கொண்ட சுதைதான் நரகாசுரன் கதை.