பக்கம்:சமணமும் தமிழும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் 81 சமண சமயத்திலிருந்து இந்துக்கள் சில கொள்கை கனைக் கைப்பற்றிக்கொண்டார்கள் என்று கூறினோம். இக் கொள்கைகளில் இந்துக்களாகிய சைவர்கள் சில முக்கியக் கொள்கைகளைத் தமக்குரியனவாகக் கொண்டிருக் கிறார்கள். அவற்றை முறையே ஆராய்வாம் : சைவமும் சமனமும் : சைவர்களுக்கும் சமண சமயத்தவருக்கும் பொதுவான சில கொள்கைகளை இன்கு சாய்வோம். இக்கொள்கைகளில் சில இரண்டு சமயத் துக்கும் பொதுவான தாசு, அடிப்படையான கொள்கை களில் ஒற்றுமையுள்ள தாக இருக்கின்றன. வேறு சில மேற்பார்வைக்குப் பொதுவாகவும் அடிப்படைக் கொள் கையில் வே பட்டும் காணப்படுகின்றன, அயிலும், மிக மிகப் பண்டைக்காலத்தில், இவ்விரு சமயங்களும் மிக நெருங்கிய தொடர்புடையனவாய் இருந்து பின்னர்க் காலஞ் செல்லச் செல்லவே பட்டு வெவ்வேறு தத்துவப் பொருள் கனைக் கற்பித்துக் கொண்டனவாகத் தோன்றுகின்றன. இக் கொள்கைகளை ஆராய்ந்து காண்போம்: சிவராத்திரி : சைவ சமயத்தவர் சிவராத்திரியைப் புனிதநாளாகக் கருதிக் கொண்டாடி வருகின்றனர். எல் வாச் சிவன் கோயில்களிலும் சிவராத்திரி வழிபாடு மிகச் சிறப்பாகச் கொண்டாடப்படுகின்றது. சமண சமயத்தவ கும் சிவராத்திரியைக் கொண்டாடி வருகின்றனர். இதில், சிறப்பு என்ன வென்றால், சைவர் சமணர் ஆகிய இருவரும் கொண்டாடும் சிவராத்திரி மாதம், பக்ஷம், திதி, நட்சத் திரம் முதலிய எல்லாம் ஒன்றாக அமைந்திருப்பதுதான். சைவர் கள் சிவராத்திரியன்று இரவு சிவபெருமானை வழிபட்டு ஒழுகினால் சிவசதி படையப்பெறலாம் என்று கருதுகின் தனர். ஆனால், சமண சமயத்தவர் சிவராத்திரி கொண்டாடுவதன் காரணம் என்ன? முதல் தீர்த்தங்கர சாகிய ஆதிபகவன் (ரிஷபதேவர்) திருக்கயிலாய மலையிலே வீடுபேறடைத்தார் என்பது சமண சமயத்தவர் கொள்கை. வெள்ளியங்கிரியாயே சபிலாபமன்பிலே ஆதிபகவன் வீடு பேறடைந்தார் என்பதும், அது மாசித் திங்கள், அமா