பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 4


வெளிநாட்டவர்கள் இங்கு வந்தனர், வீரமாமுனிவருடைய இலக்கியத்தை நினைக்கும்போது, அவர்களால் நமக்கு ஏற்பட்ட நன்மை இலக்கணத்தைப் பார்த்த கோணம், அது புதுமையாக இருந்தது. அதாவது மொழியியல் அடிப்படையில் இலக்கணத்தை அவர்கள் பார்த்தார்கள். நாம் வினையெச்சம் என்று சொன்னாலும், அதற்கு முழு வார்த்தைகளைச் சொல்லி வந்தோம். சய செயற்குஎன்று அவர்கள் சுருக்கமாக அதற்கு செய். இ கு இவ்வாறாக அமைத்தனர். இது அறிவியல் அடிப்படையில் இலக்கணத்தைப் பார்த்த கோணம்

ஒரு மொழியானது, காலந்தோறும் எழுத்து நிலையில் மாறுதலடைவது இயல்பு. இலக்கண, இலக்கிய நிலையிலும் மாற்றமடைந்து வருவது இயல்பு. இவைகளை எல்லாம் தொன்னூல் விளக்கம் பேசுகின்றது. அதற்குப் பிறகு அவருடைய சதுரகராதி. மொழி என்ற நிலையில், எல்லாச் சமயங்களுமே மொழிக்கு உதவின. அதோடு மொழி என்று வரும்போது எழுத்துச் சீர்திருத்தம், இலக்கண நூல்கள், இவைகள் எல்லாம் இந்தச் சமயங்கள் வாயிலாக, நமக்குக் கிடைத்தன. இலக்கிய வளர்ச்சி என்று பார்க்கும்போதும் கிறிஸ்தவ இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின. கிறிஸ்தவக் கம்பன் என்று கூறப்படுகின்ற கிருஷ்ணப் பிள்ளையினுடைய இரட்சணிய யாத்ரிகம், இரட்சணிய சரிதம் போன்றவை எல்லாம், தங்களுடைய கொள்கைகளை பண்பாட்டின் அடிப்படையில் தந்தது. அதே நோந்தில் ஏறத்தாழ, 14-ம் நூற்றாண்டுக்கு மேல், இஸ்லாமிய இலக்கியங்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் புதிய, இலக்கிய வடிவங்களையும் தோற்றுவித்து வளமூட்டின.

வீரமாமுனிவர் படைத்த சதுரகராதி, அதற்குப் பின்பு ராபாட் வின் ஸ்லோ ஆகியவர்கள் அகராதிக் கலையை வளர்த்தனர். இந்த மிகுதியான தொண்டில் கால்டுவெல், போப் போன்றவர்களை எல்லாப் நாம் நினைக்க வேண்டும்