பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 5


உலகத்திற்குத் தமிழையும் தமிழ் மொழியையும் இலக்கியங்களையும் மிகுதியாக உணர்த்தியவர்கள் இவர்கள் கால்டுவெல் இல்லையென்றால் மிகத் தொன்மையானது. பழமையானது தமிழ்மொழி என்ற உணர்வு உலகத்திற்கு ஏற்பட்டிருக்க முடியாது அதோடு திருவாசகத்தை முழு நிலையில் உணர்த்தியவர் ஜி. யூ போப் அவர்கள். இது போன்று பல நிலைகளில், தொடக்கத்தில் சமணர்கள் பதிணென் கீழ்க் கணக்கு நூல்களில் ஏலாதி, சிறுபஞ்சமூலம், நான்மணிக் கடிகையைத் தோற்றுவித்து. அதனுடைய வளர்ச்சி நிலையாக, பெருங்கதை, சிந்தாமணி இவைகள் அமைந்தன. அதோடு ஏறத்தாழ 300, 400 ஆண்டுகள் இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழகத்தில் மிகுதியாக இயற்றப்பட்டிருக்கின்றன. அந்த நூல்கள் அனைத்தும் வெளிவர வேண்டும் வெளி வந்தால் இநத நான்கு சமயத்தவரும், தமிழ் மொழிக்கும தமிழ் இலக்கியங்களுக்கும் தமிழ்ச் சமுதாயத்திறகும், எந்த நிலையில் வளர்ச்சிக்குத் துணை புரிந்தார்கள் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும் ஒவ்வொரு சமயத்திற்கும் சமய அடிப்படைக் கொள்கைகளை நமக்குத் தெரிவிப்பதற்காக வேண்டித்தான் இலக்கியங்கள் எழுதப்படுகின்றன என்பது நாமறிந்ததே அந்த நிலையில் அந்த இலக்கியங்கள் சமயம் சார்ந்தவையாக இருப்பினும் அவை தமிழ் இலக்கியங்கள். அதில் எந்தவித ஐயமுமில்லை அவை தமிழ்ச் சுவையுடையவை; பேரின்பம் அளிப்பவை; இடையிடையே சமய எண்ணங்களும் தரப்படுகிறன. சமய எண்ணங்கள் நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்தி, சிறப்புப் படுத்த அவைகள் துணைபுரிகின்றன.

சமய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் கட்டியங் கூறும் இவ்வரிய இலக்கிய முயற்சியில் ஈடுபட்ட தொகுப்பாசிரியர் கலைமாமணி திரு. மணவை முஸ்தபா அவர்கட்கு என் பாராட்டுக்கள்!

டாக்டர் ச.வே. சுப்பிரமணியம்

முன்னாள் இயக்குநர்

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்